சேரனுக்கு அடிபட்டு இருப்பதை பார்த்து தவிக்கும் சந்தா, அதிர்ச்சியில் பாண்டியன் - அய்யனார் துணை

By subhashini · 11/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையே என்றார். நிலா, கண்டிப்பாக அவர்கள் தான். இந்த உண்மையை கண்டுபிடிக்கணும் என்றார். பின் சோழன், நான் செய்தது பெரிய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று தான் செய்த தவறுக்கு வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் போன் எடுக்கவில்லை என்று வானதி வீட்டிற்கு வந்து விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், பல்லவன் இருவரும் சொன்னார்கள். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிலா- சோழன் இருவருமே பல்லவனின் அம்மாவை பற்றி கேட்பதற்காக நடேசன் இடம் பேசி இருந்தார்கள். நடேசன், எனக்கு எதுவும் தெரியாது. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று கடுமையாக பேசி இருந்தார். உடனே நிலா, நான் பலவனின் அம்மாவை சென்னையில் பார்த்தேன். உங்களுக்கு இந்த உண்மை தெரியும். என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள் என்றார். ஆனால், நடேசன் உண்மையை சொல்லாமல் நிலாவை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாத்ரூமில் வலிக்கு சேரன் கீழே விழுந்ததால் அவருடைய காலில் அடிபட்டு விட்டது.

அய்யனார் துணை:

நடேசன் காலை நீவி விடுகிறேன் என்று இன்னும் வலியை அதிகமாக்கி விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனின் காலில் அடிபட்டதை நினைத்து வருத்தப்பட்டார்கள். பின் நிலா, பாண்டியன், சோழன், பல்லவன் நான்கு பேருமே சேர்ந்து சமைத்தார்கள். இன்னொரு பக்கம் பல்லவனின் அம்மாவை காட்டினார்கள். ரொம்ப கஷ்டத்தில் கடன் காரர்கள் தொல்லையில் பல்லவனின் அம்மா வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய கணவருக்கும் பல்லவனின் அம்மாவுக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்து சண்டை எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருமே சமையல் செய்வதற்கு நிலாவிற்காக உதவி செய்கிறார்கள். சோழனுக்கு எதுவும் செய்ய தெரியவில்லை என்றாலும் திட்டு வாங்கிக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றை தருகிறார். அதைக் கேட்டு நிலாவிற்கு ஷாக்காக இருக்கிறது. பின் ராகவ், நிலாவிடம் வழிந்து பேசுவது நிலாவின் தோழிக்கு தெரிகிறது. ஆனால், இதை நிலா ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்திற்கு வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது வந்த சந்தா, சேரனுக்கு காலில் அடிபட்டு இருப்பதை அறிந்து எண்ணெய் போட்டு நீவி விட்டு எமோஷனலாக அழுகிறார். இதை பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருக்கிறது. பின் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வேலை செய்யும் இடத்தின் ஓனர் அந்த இடத்தை விற்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. பின் அந்த இடத்தின் ஓனர், இந்த இடத்தை மூன்று லட்சம் கொடுத்து நீயே வாங்கிக்கொள். உனக்கே தந்து விடுகிறேன் என்று சொல்கிறார். பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full