கல்யாணத்தை நிறுத்திய சேரன், ராகவை வெளுத்து வாங்கும் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 5/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சேரனுக்கு சந்தாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி இருந்தார். சந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அனிஷ், திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். அதோடு தன்னுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என்பதால் சென்னையிலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி கடைக்கு வராததால் ரொம்ப வருத்தப்பட்டார். பின் வானதிக்கு பாண்டியன் போன் செய்தார். வானதி, பாண்டியனை பிளாக் செய்து வைத்தார். வேறொரு மொபைலில் இருந்து பாண்டியன், வானதிக்கு போன் செய்தார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விட்டார்.

அனீஸ், சோழன்- நிலா இருவரும் திருமணத்தைப் பற்றி பேசுவதற்கு தங்கள் வீட்டிற்கு வந்ததை சொன்னார். சேரனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அனீஸ், எங்களுக்கு திருமணத்தில் முழு சம்மதம். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம் என்றார். சேரன் அமைதியாகவே இருந்தார். இன்னொரு பக்கம் ராகவ், நீங்கள் வேறொரு இடத்தில் வேலை தேடுகிறீர்களா? என்றார். நிலா, ஆமாம் என்றார். ராகவ், எதற்காக இப்படி செய்கிறீர்கள். நான் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தரவில்லை என்றால் உங்களால் எங்கும் வேலை பார்க்க முடியாது என்றார். நிலா, எனக்கு நியாயமாக தரவேண்டிய சர்டிபிகேட் நீங்கள் தரவில்லை என்றாலும் என்னுடைய திறமைக்கு வேலை கிடைக்கும்.

அய்யனார் துணை:

இனிமேல் இங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்றார். ராகவ், வேலை இல்லாமல் நீ என்ன கிழிக்கிறாய் என்று பார்க்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் வானதியை பார்க்க பாண்டியன் வீட்டிற்கு வந்தார். வானதி கண்டு கொள்ளவே இல்லை. இதை கவனித்த வானதியின் பெற்றோர்கள், இவர்கள் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள். நல்ல ஒரு ஃபாரின் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார். இன்னொரு பக்கம் வேலையை சோழனை பார்த்த நிலா, ஆபீஸில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுதார். சோழனுமே அழுதார். பின் நிலாவிற்கு சோழன் ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் சேரன், சந்தா வீட்டிற்கு போகிறார். அப்போது சேரன், நிலாவும் சோழனும் இன்னும் சேர்ந்து வாழ வில்லை. எனக்கு திருமணம் முடிந்த உடனே நிலா வீட்டை விட்டு சென்று விடுவாள். நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வாழணும். அதற்காக ஆறு மாதம் எனக்காக காத்திருக்க முடியுமா? என்று கேட்கிறார். சந்தா, அனிஷ் இருவருமே சேரன் கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறார்கள். அதற்குப்பின் ராகவ் காருக்குள் ஏறிய சோழன், நிலாவை அழ வைத்ததற்காக அடிக்கிறார். ராகவ் திட்டுகிறார். இருந்தாலுமே சோழன் அடிவெழுத்து வாங்கி வார்னிங் கொடுத்து விட்டு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சேரன் திருமணத்தை பற்றி பேசுகிறார்கள். நடேசன், நிலா எல்லோருமே திருமணத்தை எப்போது நடத்தலாம் என்று கேட்கிறார்கள். சேரன், சந்தா அம்மா, அப்பா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளட்டும். அதற்குப் பிறகு திருமணம் நடத்தலாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம்
பாண்டியன், வானதி தன்னிடம் பேசாததால் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full