பாண்டியனுக்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கும், வெளிவருமா உண்மை? அய்யனார் துணை

By subhashini · 10/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தரகர் சொன்ன பெண்ணை பார்த்து பேசி விட்டு வந்தேன். அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். வீட்டில் நீதான் தம்பிகளிடம் சொல்ல வேண்டும் என்றார். முதலில் நிலாவிற்கு ஷாக் ஆக இருந்தாலும் சேரன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு சந்தோஷப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனை வீடு முழுக்க சுத்தம் செய்ய சொன்னார். பின் பல்லவன்- பாண்டியன் எல்லோரையும் வரவைத்து சேரன் திருமணம் பற்றி சொன்ன விஷயத்தை சொன்னார். இதை கேட்டு தம்பிகள் மூவருக்குமே ஷாக்காக தான் இருந்தது.

சேரன் யாருக்குமே தெரியாமல் பெண் பார்த்த விஷயத்தால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டார்கள். பின் நிலா, பெண் வீட்டில் வருவதால் வீட்டையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு வேலையாக செய்யுங்கள் என்றார். அந்த சமயம் பார்த்து காயத்ரி போன் செய்ததால் சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காகவே வேலை செய்யாமல் காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது. அதற்குப்பின் பெண் வீட்டில் வந்து விட்டார்கள். அப்போது எல்லோருமே கல்யாணப் பெண் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அய்யனார் துணை:

அப்போது ஜெயந்தி, நான் தான் கல்யாணப்பெண். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையெல்லாம் நான் சேரனிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. அதோடு மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு மூணு வயது அதிகம் என்று சொன்னவுடன் நடேசனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் பெண் வீட்டில் சீக்கிரமாகவே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் சேரன் ஒத்துக் கொண்டார். ஆனால், இதில் யாருக்குமே விருப்பமில்லை. பெண் வீட்டார் சென்றவுடன் எதற்காக இந்த அவசர கல்யாணம்? ஏன் இப்படி? என்றெல்லாம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். சேரன் எதுவும் சொல்லாமல் திணறினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, எதற்காக அவசர அவசரமாக கல்யாணம் செய்யணும். யோசித்து, நன்றாக பேசி முடிவெடுத்து பண்ணலாம் என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு சேரன், இந்த கல்யாணம் எனக்கு ரொம்ப முக்கியம். சீக்கிரம் செய்யணும் என்று பாண்டியனை மனதில் வைத்துக்கொண்டு சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தும் சேரன் கேட்கவில்லை. பின் சேரனை தனியாக சந்தித்து நிலா பேசுகிறார். ஆனால், சேரன் அப்பவும் உண்மை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். அதற்குப்பின் நிலா வேலைக்கு கிளம்பும்போது சோழன், நீங்கள் பஸ் ஸ்டாண்டிற்கு என்னுடன் வாருங்கள்.

சீரியல் ட்ராக்:

ஒன்றாக போகலாம் என்று சொல்கிறார். அதற்கு நிலா, எதற்காக என்னை பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லி கட்டாயப் படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார். அங்கு தான் என்னுடைய காயத்ரி இருக்கிறார் என்று சோழன் சொல்கிறார். இதனால் கோபப்பட்ட நிலா ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு போகிறார். ஆனால், பாதி வழியிலேயே நிலா வண்டி நின்று விடுகிறது. பின் சோழன், நிலாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு செல்கிறார். அங்கு வானதி இருக்கிறார். அப்போது பாண்டியன் , சேரன் நிச்சயதார்த்தத்தை பற்றி சொல்கிறார். அப்போது சோழன்- நிலா, அவசரமாக ஏன் நடத்துகிறார்கள்? புரியவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு வானதி, அவருக்கு கல்யாணம் நடந்தால் நல்லது தானே என்று சுயநலமாக பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full