போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்ட பல்லவன், போராடும் சோழன்-சேரன், பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவின் தோழி போன் செய்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொன்னார். அப்போது நிலாவிடம் தோழி, நாங்கள் புதிதாக ஸ்டார்ட் ஆப் கம்பெனி தொடங்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்து பார்ட்னர் ஆகி கொள். வேலைக்காக நீ சிரமப்படுகிறாய். அதற்காகத்தான் இதை சொன்னேன் என்றார். பின் சோழன்- நிலா இருவரும் அந்த வேலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நிலா, அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியாது. அந்த வேலை வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்றார்.
வானதி பேசாததால் பாண்டியன் ரொம்பவே கவலையில் இருந்தார். பின் தன் கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் இருந்து போன் வாங்கி வானதியிடம் பேசி இருந்தார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பல்லவன், காயத்திரியை அழைத்துக் கொண்டு ஒரு லாஜிக்கு போனார். இதை சோழன் பார்த்து விடுகிறார். பின் சோழன், பல்லவன் கன்னத்தில் அறைந்து எதற்காக இப்படி செய்கிறாய் என்று கத்தினார். ஆனால், அது சோழனின் கனவு.
அய்யனார் துணை:
சோழன் கூப்பிடுவதறதுக்குள் பல்லவன், காயத்ரி லாஜிக்குள் சென்று விட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியின் நிர்வாகம் சேரனுக்கு போன் செய்தார்கள். அப்போது கல்லூரி நிர்வாகம், பல்லவன் ஒரு வாரம் காலேஜுக்கு வரவில்லை என்று சொன்னார். அதை கேட்டவுடன் சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்னொரு பக்கம் பல்லவன் சென்ற லாஜிக்கு போலீஸ் ரைட் போகிறார்கள். சோழன் பயந்து போய் நிற்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரூமிற்கு சென்ற போலீஸ் பல்லவன் -காயத்ரி இருவரையும் விசாரிக்கிறார்கள். பின் இருவரையும் போலீஸ் கைது செய்து வெளியே அழைத்து வருகிறார்கள்.
இதைப் பார்த்த சோழன் ஷாக் ஆகிறார். பின் போலீஸிடம் சோழன் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. இதைப்பற்றி சோழன், சேரன் நிலாவிற்கு தகவலை சொல்லி விடுகிறார். பின் மூவருமே சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். சேரன் ரொம்பவே கெஞ்சி கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
போலீஸ், காலேஜ் படிக்கும் பையனுக்கு லாட்ஜில் என்ன வேலை என்று கேள்வி கேட்கிறார். பின் மூவரும் பல்லவனை வெளியே எடுப்பதற்கு தவித்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வானதியை பார்ப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு சென்று விடுகிறார். பாண்டியன், ஏன் பேச மாட்டுகிறாய்? எதற்காக கோபப்படுகிறாய் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்கிறார். வானதி வேண்டும் என்றே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சேரன், தனக்குத் தெரிந்தவர் மூலம் பல்லவனை வெளியே எடுக்கிறார்.