சேரனை வீட்டிற்கு அழைத்து வந்த சோழன், கோபத்தில் நடேசன் செய்த வேலை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட வேண்டாம். நான் வீட்டை விட்டுப் போகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். என்னை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்றார். இதைக் கேட்டு நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே எமோஷனலாக கதறி அழுதார்கள். பின் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் சென்று தேடினார்கள். ஆனால், எங்குமே சேரன் கிடைக்கவில்லை. சேரன் வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சென்று விசாரித்தார்கள். அங்கேயுமே அவர் இல்லை.
எங்கு தேடியும் சேரன் கிடைக்கவில்லை என்று அவருடைய தம்பிகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். நடேசன் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தார். ஆனால், சேரன் இல்லை. சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதற்குப்பின் சோழன்- நிலா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேரன் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். அதற்குப் பின் சோழன் தன் அண்ணனை நினைத்து ரொம்பவே எமோஷனலாக கதறி அழுதார். நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்த்தார். இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் எல்லா இடமும் தேடி அலைந்து சேரன் கிடைக்காததால் வேதனையில் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து நடேசனின் தங்கையும் அவருடைய கணவரும் ஆறுதல் சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார்கள். அப்போது வந்த நடேசன், தன்னுடைய தங்கை, கணவர் எல்லோரையும் திட்டி விட்டு வெளியே அனுப்பினார். ஆனால், அவர்கள் கோபப்படாமல் சேரன் வீட்டில் ஆறுதல் சொல்லிவிட்டு போனார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் நடேசன், இந்திக்காரப் பெண் வீட்டில் சேரன் இருக்கிறாரா? தேடிப்பார் என்றார். உடனே சேரன் சந்தேகப்பட்டு சந்தாவின் அண்ணாவை பார்த்தார். சந்தாவின் அண்ணாவால் எதுவும்
மறைக்க முடியவில்லை. பின் வேறு வழியில்லாமல் சேரன் தன் வீட்டில் இருக்கும் உண்மையை சொல்லிவிட்டார். அதற்குப்பின் சேரனை பார்க்க சோழன் சென்று விட்டார். அப்போது கோபத்தில் சோழன், வீட்டில் எல்லோருமே அழுது கொண்டிருப்பதை சொன்னார். பின் சேரன், சோழனை கட்டிப்பிடித்து அழுதார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் உள்ள பின் சேரனை சமாதானம் செய்து சோழன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டில் எல்லோருமே சேரனை பார்த்து எமோஷனலாக பேசுகிறார்கள். அதற்கு பின் நடேசன், சேரனை கன்னத்தில் அறைந்து என்னுடைய இரண்டு மனைவியும் நான் தான் கொன்று விட்டேன் என்று இந்த ஊர் உலகம் பேசியது. உண்மை எதுவென்று எனக்கு தான் தெரியும். ஜோசியர் சொன்னார் என்று வீட்டை விட்டு போவதா? என்று திட்டுகிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.