பிரச்சனையில் சிக்கிய சந்தாவை வீட்டிற்கு அழைத்து வந்த சேரன், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 14/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரனை சமாதானம் செய்து சோழன் வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் எல்லோருமே சேரனை பார்த்து எமோஷனலாக பேசினார்கள். அதற்கு பின் நடேசன், சேரனை கன்னத்தில் அறைந்து என்னுடைய இரண்டு மனைவியும் நான் தான் கொன்று விட்டேன் என்று இந்த ஊர் உலகம் பேசியது. உண்மை எதுவென்று எனக்கு தான் தெரியும். ஜோசியர் சொன்னார் என்று வீட்டை விட்டு போவதா? என்று திட்டினார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.

நேற்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே அவரவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சேரன் மட்டும் ஜாதகத்தை நினைத்துதான் கவலைப்பட்டார். உடனே சோழன், அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபிக்கிறேன் என்றார். பின் நான்கு ஜோசியர்களை வீட்டிற்கு வரவைத்து சேரன் ஜாதகத்தை பார்க்க சொன்னார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். ஆனால், நான்கு பேர் குலதெய்வம் கோவிலுக்கு போக சொன்னார்கள்.

அய்யனார் துணை:

இதை பார்த்து சேரனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அவர்களை அனுப்பிவிட்ட சோழன், உன்னுடைய ஜாதகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே பொய் என்றெல்லாம் சொன்னார். அப்போதுதான் சேரன், நிம்மதி அடைந்தார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் நிலா, குலதெய்வ கோவிலுக்கு போக சொன்னார்கள். போகலாமா? என்று கேட்டார். அதற்கு வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதித்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜாதகத்தின் மேல் இருந்தபயம் போய் சேரன் சந்தோசமாக இருக்கிறார். அப்போது நிலா, குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார். ஆனால், வீட்டில் யாருக்குமே குலதெய்வம் என்னவென்று தெரியவில்லை. பின் நடேசனிடம் விசாரிக்கிறார்கள் என்று சொல்கிறார். உடனே சோழன், நான் எப்படியாவது குல தெய்வத்தை கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் சந்தாவின் முறைமாமன் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் இருந்து வருகிற விஷயம் தெரிந்த உடன் சந்தாவும் அவருடைய அண்ணாவும் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

சேரன், அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொல்கிறார். ஆனால், சந்தா ரொம்பவே அழுது கொண்டிருக்கிறார். உடனே சேரன், என்னுடைய வீட்டில் நிலா உடன் சந்தா இருந்து கொள்ளட்டும். அனிஷ் நீ எங்காவது சென்று விடு. அவர்கள் யாரும் இல்லை என்று கிளம்பி விடுவார்கள். அதற்குப் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு போவீர்கள் என்றெல்லாம் சொல்கிறார். அதனால் சந்தாவின் அண்ணாவுமே ஒத்துக்கொள்கிறார். பின் சந்தாவை அழைத்துக் கொண்டு அவருடைய அண்ணா சேரன் வீட்டிற்கு வருகிறார்கள். பின் சேரன், நடந்ததை பற்றி எல்லாம் சொல்வதால் எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full