சந்தாவிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரவுடிகள், கொந்தளித்த சேரன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா மட்டும் இல்லையென்றால் நீ பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பாய் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பின் மறுநாள் சேரன் கோயிலுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்போது சேரன், இனி எந்த பெண்ணிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன். எல்லோருமே அக்கா தங்கை தான் என்று சொல்லி சூடத்தின் முன்பு சத்தியம் செய் என்றார். சோழன் தயங்கி தயங்கி நின்றார். சேரன் மிரட்டுவதால் சோழன் சத்தியம் செய்யப் போனார். அப்போது எதிரில் ஒரு பெண் தேங்காய் உடைக்க தடுமாறிக் கொண்டிருப்பதை சோழன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
வேறு வழி இல்லாமல் சத்தியம் செய்துவிட்டு சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொன்னார்.
சோழன் அந்த பெண்ணிற்கு தேங்காய் உடைக்க உதவி செய்தார். இதை சேரன், நிலா எல்லாம் பார்த்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த சேரன், சோழனை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சோழன் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், இந்த முறை சேரன் கடுமையாக சோழனை திட்டிவிட்டு சென்றார். பாண்டியன், பல்லவன் இருவருமே சேரனுடன் சேர்ந்து திட்டினார்கள்.
அய்யனார் துணை:
நிலா எதுவும் பேசாமல் சோழனை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் அவுட்டிங் செல்வதற்கு தயாராகினார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சந்தோசமாக வழி அனுப்பி வைத்தார்கள். சந்தாவும் சேரனுடன் வெளியே செல்வதால் சூப்பராக தயாராகி வந்தார். பின் இருவரும் சேர்ந்து பைக்கில் லாங் டிரைவ் சுற்றினார்கள். பின் கடைசியாக பீச்சுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன்-சந்தா இருவரும் பீச்சில் ரொம்ப சந்தோசமாக விளையாடியும் பேசியும் இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அந்த இடத்திற்கு மூன்று ரவுடிகள் வருகிறார்கள். அவர்கள் சந்தாவை பார்த்து தப்பாக பேசுகிறார்கள். கோபப்பட்ட சேரன், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று சொல்கிறார். உடனே அந்த ரவுடிகள் சந்தாவின் மீது கை வைக்க போகிறார்கள். கோபத்தில் சேரன் அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சேரன்,சந்தா இருவரும் நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் சேரன், சந்தாவை பத்திரமாக வீட்டில் விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.இனி அடிக்கடி வெளியில் போகலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சோழனுக்கு பசிப்பதால்
சமைக்க சொல்லி கேட்கிறார். நிலா எல்லோரும் சேர்ந்து தான் சமைக்கணும் உதவி செய்யுங்கள் என்று சொல்வதால் சோழன் வழி இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.