முதன் முதலாக அவுட்டிங் செல்லும் சந்தா, பிரச்சனையில் சிக்கிய சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 7/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழனை பார்த்து காதலிக்கும் விஷயத்தை சொன்னார். ஆனால், உண்மையில் அதெல்லாம் சோழனின் கனவு. நிலா தன்னிடம் காதல் சொல்ல தான் வர வைத்தார் என்றெல்லாம் நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தார். சோழன் ஆபிசுக்கு வெளியே இருப்பதை பார்த்து ராகவிற்க்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் பல்லவன், சேரனை சந்தித்து நிலா பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டார்.

அதற்கு பின் அங்கு வந்த சந்தாவிடம், பல்லவன் தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்று தேவையில்லாத வேலை எல்லாம் செய்தார். இதனால் சந்தா கோபப்பட்டு பல்லவனை அடிக்க போனார். இன்னொரு பக்கம் நிலா, சோழன் இருவருமே காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, காயத்ரி வீட்டிற்கு போக வேண்டும் என்றார். சோழன் முடியாது என்று மறுத்தார். பின் நிலா கட்டாயப்படுத்தி தான் சோழனை காயத்திரி வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு சோழன், தான் செய்த தவறை உணர்ந்து காயத்ரியிடம் மன்னிப்பு கேட்டார். காயத்ரி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் காயத்ரி, நான் அதை எல்லாம் மறந்து விட்டேன். நீங்கள் அதைப் பற்றி யோசிக்காதீர்கள் என்று சொல்கிறார். பின் சோழன், மீண்டும் காயத்ரியிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வந்து விடுகிறார். நிலாவுமே காயத்ரிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பின் காரில் சோழன், நான் செய்த தவறை நினைத்து தினமும் குற்ற உணர்ச்சியில் இருந்தேன். ஆனால், இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. ரொம்ப நன்றி என்று கையெடுத்து கும்பிடுகிறார். அதற்குப் பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

சீரியல் ட்ராக்:

அப்போது சோழன், இனிமேல் இந்த சோழன் யோகியன், நேர்மையானவன், நல்லவன் என்றெல்லாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த ஓனர், எதற்காக பெண்களிடம் வலிந்து பேசுகிறாய், வம்பு இழுக்கிறாய். இரண்டு பெண்கள் உன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். இப்படியே போனால் உன்னுடன் யாரும் சவாரி வர மாட்டார்கள் என்று வெளுத்து வாங்குகிறார். இதையெல்லாம் கேட்டு நிலா முறைத்துக் கொண்டிருக்கிறார். சேரன், பாண்டியன் எல்லோருமே கோபப்படுகிறார்கள். அதற்குப்பின் நிலா, பல்லவனுக்காக ஒரு வாட்ச் வாங்கிக் கொடுக்கிறார். அதை பார்த்து பல்லவன் ரொம்பவே சந்தோசப்படுகிறார். அதற்குப்பின் சோழன், நிலா முகம் பார்த்து கூட பேச முடியாமல் தயங்கி நிற்கிறார்.

https://www.youtube.com/watch?v=-jVOntOdz8Q

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சந்தா, சேரன் இருவருமே அவுட்டிங் செல்கிறார்கள். இருவரும் ரொம்ப சந்தோசமாக ரொமான்டிக்காக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சந்தா-சேரன் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ரவுடிகள் சந்தாவிடம் வம்பு இழுக்கிறார்கள். உடனே கோபத்தில் சேரன் அவர்களை அடிக்க போகிறார்.

behindtalkies AMP · Quick view
View full