ஒருவழியாக குலதெய்வ கோயிலை கண்டுபிடித்த சேரன் குடும்பம், சோழன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை

By subhashini · 15/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஜோசியர் சொன்னதை சேரனால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின் அவர்களை அனுப்பிவிட்ட சோழன், உன்னுடைய ஜாதகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே பொய் என்றெல்லாம் சொன்னார். அப்போதுதான் சேரன், நிம்மதி அடைந்தார். வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் நிலா, குலதெய்வ கோவிலுக்கு போக சொன்னார்கள். போகலாமா? என்று கேட்டார். அதற்கு வீட்டில் உள்ள எல்லோருமே சம்மதித்தார்கள்.

ஜாதகத்தின் மேல் இருந்த பயம் போய் சேரன் சந்தோசமாக இருந்தார். அப்போது நிலா, குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். ஆனால், வீட்டில் யாருக்குமே குலதெய்வம் என்னவென்று தெரியவில்லை. பின் நடேசனிடம் விசாரித்தார்கள். நடேசன் தெரியாது என்றார். அதற்குப்பின் சந்தாவின் முறைமாமன் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் இருந்து வருகிற விஷயம் தெரிந்த உடன் சந்தாவும் அவருடைய அண்ணாவும் புலம்பி கொண்டிருந்தார்கள்.

அய்யனார் துணை:

சேரன், அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொன்னார். ஆனால், சந்தா ரொம்பவே அழுது கொண்டிருந்தார். உடனே சேரன், என்னுடைய வீட்டில் நிலா உடன் சந்தா இருந்து கொள்ளட்டும். அனிஷ் நீ எங்காவது சென்று விடு. அவர்கள் யாரும் இல்லை என்று கிளம்பி விடுவார்கள். அதற்குப் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு போவீர்கள் என்றெல்லாம் சொன்னார். பின் அனிஷ், சந்தாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வந்தார்கள். பின் சேரன், நடந்ததை பற்றி எல்லாம் சொல்வதால் எல்லோருமே சந்தாவை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, குலதெய்வ கோவில் பற்றி தெரிந்து கொள்வதற்காக கார்த்திகாவிற்கு போன் செய்து கேட்கிறார். ஆனால், கார்த்திகாவிற்கு சரியாக தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் பல்லவன் கல்லூரிக்கு செல்லும்போது ஒரு பெண் அவரை பார்த்துக்கொண்டிருக்கிறார். பின் பல்லவன், அந்த பெண்ணிடமே விசாரிக்க, அவர் சிரித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் சேரன் - சோழன் இருவருமே வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சேரனின் பெரியப்பா, திண்டுக்கல்லில் ஓட்டம்சத்திரத்தில் உள்ள அய்யனார் சாமி தான் நம்மளுடைய குலதெய்வம். நீ மட்டும் போய் சாமி கும்பிட்டு வா என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது சோழன் பிளாஷ்பேக்கை நினைத்து பார்க்கிறார். சோழன் தான் ஒரு ஜோசியரை வைத்து குலதெய்வ சாமி இருக்கும் இடத்தை சொல்ல சொல்லி மிரட்டி இருக்கிறார். அதனால் தான் பயந்து போய் பெரியப்பா உண்மையை சொன்னார். பின் வீட்டிற்கு வந்த சேரன், குலதெய்வசாமி கோயில் இருக்கும் இடத்தை பற்றி சொல்கிறார். எல்லோருமே சந்தோஷப்பட்டு கோவிலுக்கு போகலாம் என்று இருக்கிறார்கள். அப்பொழுது நடேசன், நம்முடைய குலதெய்வ சாமி கோயில் திண்டுக்கல் பக்கம் ஒட்டச்சத்திரத்தில் இருக்கும் அய்யனார் தான் என்று சொல்கிறார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full