பீகார் செல்லும் அய்யனார் குடும்பம், சந்தா அப்பா எடுக்கும் முடிவு என்ன? பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 22/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், நடேசன் இருவருமே சோழனுக்கு என்ன நடந்திருக்கும் என்று கவலையில் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சோழன்- நிலா எல்லோருமே வீட்டிற்கு வந்து விட்டார்கள். சேரன், பாண்டியன் பேச வரும்போது கோபத்தில் சோழன், என்னை அவர்கள் அடித்தது கூட வலிக்கவில்லை. ஆனால், நீங்கள் என்னை விட்டுக் கொடுத்து என் மீது தான் தவறு என்று சொன்னீர்களே அது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். அதோடு தன்னுடைய சகோதரர்களையும் வெளுத்து வாங்கினார். பின் சேரன், பல்லவனிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்

கோபத்தில் சோழன், நிலாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பினார். சேரன், பாண்டியன் எல்லோருமே தடுத்துமே சோழன் கேட்கவில்லை. நிலா, நான் அவரை சமாதானம் செய்து அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். பின் ஒரு ஹோட்டலுக்கு நிலா, சோழனை அழைத்து சென்றார். அங்கு இருவருமே மனம் விட்டு பேசி கொண்டார்கள். நிலாவுமே சோழனை சமாதானம் செய்து ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். பின் வீட்டிற்கு சோழன் வந்தவுடன் சேரன், பாண்டியன் எல்லோருமே மன்னிப்பு கேட்டார்கள். சோழனும் அமைதியாகி விட்டார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் சேரனுக்கு போன் செய்த சந்தா, என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லுங்கள். எனக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று எமோஷனாக அழுகிறார். சந்தா சொல்வதைக் கேட்டு சேரணுமே கவலைப்படுகிறார். பின் சேரன், சோழன் எல்லோருமே சந்தாவிற்கு ஆறுதல் சொல்கிறார்கள். அதற்குப்பின் நிலா, சோழன், பாண்டியன் மூவருமே சந்தாவின் ஊருக்கு செல்வதற்கு திட்டம் போடுகிறார்கள். அப்போது பல்லவன் நானும் வருகிறேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே சோழன், அதெல்லாம் தேவையில்லை. உனக்கு துணையாக பாண்டியன் இங்கே விட்டு செல்கிறோம் என்கிறார். பின் இதைப் பற்றி பாண்டியன், வானதியிடம் சொல்கிறார். வானதி, தனக்காக தான் பாண்டியன் போகாம இருக்கிறான் என்று தவறாக புரிந்து கொள்கிறார். அதற்குப்பின் சோழன், நிலா, சேரன் மூவருமே சந்தாவின் ஊருக்கு செல்வதற்கு தயாராகிறார்கள். சோழன் மூவருக்குமே பிளைட் டிக்கெட் போட்டுக் கொண்டு வந்து தருகிறார். நடேசன், தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்கிறார். ஆனால் சோழன் அதெல்லாம் கேட்கவில்லை.

https://www.youtube.com/watch?v=mLZQWUXs0hI

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன், சேரன், நிலா மூவருமே சந்தாவின் ஊருக்கு சென்று விடுகிறார்கள். அங்கு சந்தாவின் அப்பாவை சந்தித்த சேரன் பெண் கேட்கிறார்கள். அதற்கு சந்தாவின் அப்பா, நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீடு, சொத்து என்று வைத்திருக்கிறார். என் பெண்ணையும் நல்லா பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார். உடனே சோழன், என் அண்ணன் 25 லட்சம் பணம், 30 பவுன் நகையை ஆறு மாதத்தில் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பார். நீங்கள் என் அண்ணனுக்கு சந்தாவை திருமணம் செய்து தருவீர்களா? என்று கேட்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full