திருமணம் நின்றதால் வேதனையில் இருக்கும் சேரன் குடும்பம், சந்தா நிலைமை என்ன? அய்யனார் துணை

By subhashini · 15/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன்- சந்தா திருமணத்தை கோலாகலமாக நடத்த சகோதரர்கள் திட்டம் போட்டு இருந்தார்கள். வீடே திருவிழா கோலமாக இருக்கிறது. சேரனை மாப்பிள்ளை போல தயார் செய்து அழைத்து வந்தார்கள். நிலாவும் சந்தாவை அழகாக தயார் செய்து அழைத்து வந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து குரூப்பாக போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் கல்யாணத்திற்காக மொத்த குடும்பமும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு சேரன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது.

சேரன் திருமணத்திற்கு உறவினர்கள் வந்தார்கள். எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். சேரன்-சந்தா இருவரையும் மணமேடைக்கு அழைத்து வந்து திருமணத்திற்கான சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். சேரன் தாலி கட்டப் போகும் போது அங்கு துப்பாக்கி சத்தம் கேட்கிறது. சந்தாவின் முறைமாமன் தன்னுடைய அடியாட்களை வைத்து கோயிலுக்குள் வந்து ரகளை செய்தார். எல்லோரையும் தடுத்து நிறுத்தி சந்தாவை அழைத்து செல்லப்பார்த்தார்.

அய்யனார் துணை:

சேரன் குடும்பத்தினர் எவ்வளவு தடுக்க முயன்றுமே முடியவே இல்லை. சந்தாவின் முறைமாமன் துப்பாக்கி வைத்து இருந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பின் சந்தா-அனிஷ் இருவரையும் அவருடைய முறை மாமன் அழைத்து சென்று விட்டார். இதனால் சேரன் ரொம்பவே மனமடைந்து விட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணம் நின்றதால் அதிர்ச்சியில் இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் திருமணம் நின்று போனதால் ரொம்பவே மனமடைந்து இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இருந்தாலும் சேரன்- சந்தாவை நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். சேரன், இனிமேல் என் திருமணத்தை பற்றி யாரும் பேச வேண்டாம். அவர் அவர்கள் வேலையை பாருங்கள் என்கிறார். வீட்டில் எல்லோரும் சேரனை நினைத்து கவலைப்படுகிறார்கள். ஆனால், சேரன் கவலை இல்லாமல் இருப்பது போல நடந்து கொள்கிறார். இருந்தாலும் உள்ளுக்குள் ரொம்பவே வேதனைப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது சேரனுக்கு போன் செய்த அனிஷ், நாங்கள் பத்திரமாக இருக்கோம். எங்க சொந்த ஊருக்கு போகிறோம். ஆனால், இப்போதைக்கு சந்தாவிற்கு கல்யாணம் செய்ய மாட்டார்கள். கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் பார்த்து கொள்கிறோம். அந்த ஊருக்கு போன உடன் சந்தாவிடம் போனை கொடுக்கிறேன் என்று சொல்கிறார். சேரனுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. வீட்டில் எல்லோருமே சந்தாவின் சொந்த ஊருக்கு போகலாமா? என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full