சந்தாவின் ஊருக்கு செல்லும் சேரன், அய்யனார் வீட்டில் வானதி செய்யும் அட்ராசிட்டி - அய்யனார் துணை

By subhashini · 23/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன் எல்லோருமே தடுத்துமே சோழன் கேட்கவில்லை. நிலா, நான் அவரை சமாதானம் செய்து அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். பின் ஒரு ஹோட்டலுக்கு நிலா, சோழனை அழைத்து சென்றார். அங்கு இருவருமே மனம் விட்டு பேசி கொண்டார்கள். நிலாவுமே சோழனை சமாதானம் செய்து ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். பின் வீட்டிற்கு சோழன் வந்தவுடன் சேரன், பாண்டியன் எல்லோருமே மன்னிப்பு கேட்டார்கள். சோழனும் அமைதியாகி விட்டார்.

சேரனுக்கு போன் செய்த சந்தா, என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லுங்கள். எனக்கு திருமணம் ஏற்பாடு செய்தார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று எமோஷனாக அழுதார். சந்தா சொல்வதைக் கேட்டு சேரணுமே கவலைப்பட்டார். பின் சேரன், சோழன் எல்லோருமே சந்தாவிற்கு ஆறுதல் சொன்னார்கள். அதற்குப்பின் நிலா, சோழன், பாண்டியன் மூவருமே சந்தாவின் ஊருக்கு செல்வதற்கு திட்டம் போட்டார்கள். அப்போது பல்லவன் நானும் வருகிறேன் என்றார்.

அய்யனார் துணை:

உடனே சோழன், அதெல்லாம் தேவையில்லை. உனக்கு துணையாக பாண்டியன் இங்கே விட்டு செல்கிறோம் என்றார். பின் இதைப் பற்றி பாண்டியன், வானதியிடம் சொன்னார். வானதி, தனக்காக தான் பாண்டியன் போகாம இருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டார். அதற்குப்பின் சோழன், நிலா, சேரன் மூவருமே சந்தாவின் ஊருக்கு செல்வதற்கு தயாரானார்கள். சோழன் மூவருக்குமே பிளைட் டிக்கெட் போட்டுக் கொண்டு வந்து தந்தார். நடேசன், தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்றார். ஆனால் சோழன் அதெல்லாம் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, சோழன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன், தனக்காக பிளைட் புக் பண்ணதை பற்றி நிலா கேட்கிறார். சோழன், நீங்கள் கஷ்டப்படக்கூடாது. உங்களை பத்திரமாக அழைத்துக் கொண்டு போகணும் என்றெல்லாம் பேசுகிறார். இதனால் நிலாவிற்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதோடு சோழனிடம் நிலா ரொம்ப அன்பாக பேசுகிறார். மறுநாள் காலையில் சந்தாவின் சொந்த ஊருக்கு செல்வதற்கு சேரன், பாண்டியன், சோழன் மூவருமே தயாராகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து வானதி வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் எல்லோருமே மூவரையும் வழி அனுப்பி வைக்கிறார்கள். வானதி, வீட்டில் யாரும் இல்லாததால் வேலைகளை செய்ய தொடங்கினார். பின் பாண்டியன், பல்லவன் இருவரும் வேணாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. அதற்குப்பின் வானதி, சமைக்கிறேன் என்று ஒரு பெரிய அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். பின் வானதி, மளிகை பொருள் எழுதிக் கொடுக்கிறார். அதை பார்த்து நடேசனுக்கு பயங்கர கடுப்பாகி கிண்டல் அடிக்கிறார். வானதிக்கு உதவி செய்வதற்காக பாண்டியனும் களமிறங்குகிறார்.

behindtalkies AMP · Quick view
View full