குலதெய்வ கோயிலுக்கும் தயாராகி செல்லும் சேரன் குடும்பம் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஜாதகத்தின் மேல் இருந்த பயம் போய் சேரன் சந்தோசமாக இருந்தார். அப்போது நிலா, குலதெய்வ கோவிலுக்கு போகணும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். ஆனால், வீட்டில் யாருக்குமே குலதெய்வம் என்னவென்று தெரியவில்லை. பின் நடேசனிடம் விசாரித்தார்கள். நடேசன் தெரியாது என்றார். அதற்குப்பின் சந்தாவின் முறைமாமன் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வட இந்தியாவில் இருந்து வருகிற விஷயம் தெரிந்த உடன் சந்தாவும் அவருடைய அண்ணாவும் புலம்பி கொண்டிருந்தார்கள்.
சேரன், அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொன்னார். ஆனால், சந்தா ரொம்பவே அழுது கொண்டிருந்தார். உடனே சேரன், என்னுடைய வீட்டில் நிலா உடன் சந்தா இருந்து கொள்ளட்டும். அனிஷ் நீ எங்காவது சென்று விடு. அவர்கள் யாரும் இல்லை என்று கிளம்பி விடுவார்கள். அதற்குப் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு போவீர்கள் என்றெல்லாம் சொன்னார். பின் அனிஷ், சந்தாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வந்தார்கள். பின் சேரன், நடந்ததை பற்றி எல்லாம் சொல்வதால் எல்லோருமே சந்தாவை ஏற்றுக் கொண்டார்கள்.
அய்யனார் துணை:
நிலா, குலதெய்வ கோவில் பற்றி தெரிந்து கொள்வதற்காக கார்த்திகாவிற்கு போன் செய்து கேட்டார். ஆனால், கார்த்திகாவிற்கு சரியாக தெரியவில்லை என்று சொல்லி விட்டார். இன்னொரு பக்கம் பல்லவன் கல்லூரிக்கு செல்லும்போது ஒரு பெண் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். பின் பல்லவன், அந்த பெண்ணிடமே விசாரிக்க, அவர் சிரித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் சேரன் - சோழன் இருவருமே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சேரனின் பெரியப்பா, திண்டுக்கல்லில் ஓட்டம்சத்திரத்தில் உள்ள அய்யனார் சாமி தான் நம்மளுடைய குலதெய்வம். நீ மட்டும் போய் சாமி கும்பிட்டு வா என்றார்.
நேற்று எபிசோட்:
சேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது சோழன் பிளாஷ்பேக்கை நினைத்து பார்த்தார். சோழன் தான் ஒரு ஜோசியரை வைத்து குலதெய்வ சாமி இருக்கும் இடத்தை சொல்ல சொல்லி மிரட்டி இருந்தார். அதனால் தான் பயந்து போய் பெரியப்பா உண்மையை சொன்னார். பின் வீட்டிற்கு வந்த சேரன், குலதெய்வசாமி கோயில் இருக்கும் இடத்தை பற்றி சொன்னார். எல்லோருமே சந்தோஷப்பட்டு கோவிலுக்கு போகலாம் என்று இருந்தார்கள். அப்பொழுது நடேசன், நம்முடைய குலதெய்வ சாமி கோயில் திண்டுக்கல் பக்கம் ஒட்டச்சத்திரத்தில் இருக்கும் அய்யனார் தான் என்றார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன், எனக்கு குலதெய்வம் அய்யனார் கனவில் வந்து கோயிலுக்கு வர சொன்னார். அதனால் தான் சொன்னேன் என்றார். பின் எல்லோருமே குலதெய்வ கோயிலுக்கு செல்ல தயாராகிறார்கள். பாண்டியன், வானதிக்கு போன் செய்து தகவலை சொல்கிறார். நடேசனை அழைத்துப் போக வேண்டாம் என்று சோழன் சொல்கிறார். அதற்கு நிலா, உங்கள் அப்பா அழைத்துக் கொண்டு போகலாம் என்று சொல்கிறார். பின் சந்தாவையும் குலதெய்வ கோயிலுக்கு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். பின் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கோயிலுக்கு கிளம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.