சந்தாவை காப்பாற்ற சேரன் செய்த விஷயம், நிலாவிடம் சோழன் கேட்டது - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 27/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சந்தாவை பார்க்க போனார். அப்போது சந்தாவிடம், அவர் பெற்றோர் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் விஷயத்தை சொல்லி அழுதார். சேரனும் சந்தாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் நிலா, சோழன் வயதான தம்பதி எல்லோரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டார்கள். அப்போது சோழன்,
டிரைவராக போகும்போது தான் படுக்க இடம் இல்லாமல் படும் கஷ்டத்தை எல்லாம் சொன்னார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே வருத்தப்பட்டார்.

நிலா, தன்னுடைய ஆசை கனவுகளை பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சோழன், எனக்கெல்லாம் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு தூங்க சென்றார். இன்னொரு பக்கம் சேரனுக்கு போன் செய்த அனிஷ், சந்தாவை அழைத்துக் கொண்டு போக என்னுடைய வீட்டில் இருந்து வந்தார்கள். சந்தாவை முறை மாமனுக்கு கட்டி வைக்கப் போவதாக சொன்னார்கள். சந்தா ரொம்பவே பயந்து போயிருக்கிறார். ஏதாவது செய்யுங்கள் அண்ணா என்று சொன்னார். சேரன், சீக்கிரமா வீட்டுக்கு வருகிறேன் என்றார்.

அய்யனார் துணை:

பின் சேரன், பாண்டியன் இருவருமே சந்தா வீட்டுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் சோழன்- நிலா இருவரும் வெளியில் கிளம்புவதற்கு தயாராக இருந்தார்கள். அப்போது நிலா, உங்களுக்கென்று ஆசை கனவு லட்சியம் எதுவும் இல்லையா? இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றார். சோழனும் நிலா சொன்னதை திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரனை பார்த்தவுடன் சந்தா எமோஷனலாக அழுதார். அனீஸ், என்னுடைய வீட்டில் இருந்து சென்னை வந்து விட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவார்கள். என்ன செய்வதென்றே புரியவில்லை என்று சொல்கிறார். சேரனும் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நிலா இருவரும் தயாராகி அந்த வயதான ஜோடியை அழைத்துக்கொண்டு கோயில் குளம் என்று கிளம்புகிறார்கள். அப்போது அந்த வயசான ஜோடி, தங்களுடைய காதல் கதையை பற்றி சொல்கிறார்கள். நீங்களும் இதே மாதிரி உங்கள் கதையை வயதான பின் சொல்லணும் என்று கேட்கிறார். நிலாவும் அதற்கு சரி என்கிறார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் அந்த வயதான ஜோடி கோயிலுக்குள் சென்றவுடன் சோழன், உண்மையாலுமே நாம் கடைசிவரை சேர்ந்திருப்போமா? என்று கேட்கிறார். நிலா, நான் சும்மாதான் சொன்னேன் என்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தாவின் முறைமாமன் வீட்டிற்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சேரன், நீங்கள் இங்கிருக்க தேவையில்லை. சந்தாவை அழைத்துக் கொண்டு நீ முதலில் இருந்து கிளம்பு அனிஷ் என்கிறார். அனிஷ்-சந்தா கிளம்பி போகிறார்கள். வானதி, பல்லவனை அழைத்துக் கொண்டு பைக்கில் வருகிறார். இன்னொரு பக்கம் சந்தாவின் வீட்டிற்கு முறை மாமனும் வந்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது

behindtalkies AMP · Quick view
View full