வீட்டில் வந்து ப்ரச்சனை செய்யும் ரவுடிகள், துவைத்து எடுக்கும் நடேசன் மகன்கள் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா எதுவும் பேசாமல் சோழனை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் அவுட்டிங் செல்வதற்கு தயாராகினார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சந்தோசமாக வழி அனுப்பி வைத்தார்கள். சந்தாவும் சேரனுடன் வெளியே செல்வதால் சூப்பராக தயாராகி வந்தார். பின் இருவரும் சேர்ந்து பைக்கில் லாங் டிரைவ் சுற்றினார்கள். பின் கடைசியாக பீச்சுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சேரன்-சந்தா இருவரும் பீச்சில் ரொம்ப சந்தோசமாக விளையாடியும் பேசியும் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அந்த இடத்திற்கு மூன்று ரவுடிகள் வந்தார்கள். அவர்கள் சந்தாவை பார்த்து தப்பாக பேசினார்கள். கோபப்பட்ட சேரன், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்றார். உடனே அந்த ரவுடிகள் சந்தாவின் மீது கை வைக்க போனார்கள். கோபத்தில் சேரன் அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து விட்டார்கள்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் சேரன்,சந்தா இருவரும் நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேரன், சந்தாவை பத்திரமாக வீட்டில் விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.இனி அடிக்கடி வெளியில் போகலாம் என்றார். இன்னொரு பக்கம் சோழனுக்கு பசிப்பதால்
சமைக்க சொல்லி கேட்டார். நிலா எல்லோரும் சேர்ந்து தான் சமைக்கணும் உதவி செய்யுங்கள் என்று சொல்வதால் சோழன் வழி இல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சமைக்கும்போது நிலா- சோழன் இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொள்கிறார்கள். உடனே பாண்டியன், சாப்பாடு வாங்கி வந்து விடுகிறார். அதற்குப் பின் சேரன் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த சேரனிடம், சோழன் விசாரிக்கிறார். ரவுடிகள் தகராறு செய்ததை சொல்லாமல் சந்தாவுடன் பீச்சுக்கு போயிட்டு வந்ததை மட்டும் சேரன் சொல்கிறார். அதற்குப்பின் அந்த ரவுடிகள் சேரனின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு வந்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது அந்த ரவுடிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை அடிக்க போகிறார்கள். உடனே சோழன், பாண்டியன் இருவரும் தடுத்து அந்த ரவுடிகளை அடித்து அங்கிருந்து அனுப்புகிறார்கள். நடேசனும் செங்கல் எடுத்து அனைவரையும் அடித்து துரத்துகிறார். பின் சோழன், என்ன நடந்தது என்று கேட்கிறார். உடனே சேரன், இந்த ரவுடிகள் தகராறு செய்ததை எல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து சோழன், பாண்டியனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்கு பின் வானதி, பாண்டியன் கடைக்கு வருகிறார். வழக்கம் போல வானதி பாண்டியன் மீது கோபத்தில் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது