காலில் அடிபட்டு அவஸ்தைப்படும் சேரன், வேதனையில் துடிக்கும் சந்தா - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன், நடேசன் மூவருமே மும்முரமாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். சோழன் ரொம்பவே பயந்து கொண்டு புலம்பினார். தன்னுடைய அண்ணனிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், சேரன் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காயத்ரியின் வீட்டிற்கு பல்லவன், நிலா இருவரும் சென்று விட்டார்கள். அப்போது காயத்ரியின் நண்பர்கள், காயத்ரி கதவை சாத்திக்கொண்டு வெளிய வரவில்லை அழுது கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். நிலா கதவு தட்டியுமே காயத்ரி வரவே இல்லை.
இன்னொரு பக்கம் சோழன், நான் நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்துங்கள். இதெல்லாம் நாடகம் தானே என்றெல்லாம் கேட்டார். பின் பலவனுக்கு போன் செய்து சோழன் விசாரித்தார். நிலா, காயத்ரி வீட்டில் இருப்பது தெரிந்தவுடன் இன்னும் சோழனுக்கு கதி கலங்குகிறது. பின் கதவை திறந்த காயத்ரி எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். நிலா அவருக்கு ஆறுதல் சொன்னார்.
அய்யனார் துணை:
நிலா, காயத்ரிக்கு ஆறுதல் சொன்னார். காயத்ரி, நான் அவரை உண்மையாக காதலித்தேன். என்னை கல்யாணம் செய்து கொள்வார் என்று நினைத்தேன். என்னிடம் அப்படித்தான் அவர் பழகினார் என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு நிலா, சோழன் எல்லோரிடமும் நன்றாக பேசுவார். அவர் நீ காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நீ நிலைமையை புரிந்து கொள். அவர் உன்னை ஏமாற்றவில்லை என்றெல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் காயத்ரி அழுது கொண்டிருந்தார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் எல்லோருமே வீட்டை சுத்தம் செய்து தயாராகிறார்கள். சேரன், நிலாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. ரூமுக்குள் சென்று தான் செய்த தவறை நினைத்து சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சோழன் கெஞ்சி கதறினார். ஆனால் யாருமே கேட்கவில்லை.
https://www.youtube.com/watch?v=MtOcVrIF9A4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சேரனின் காலில் அடிபட்டு விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ஹாஸ்பிடல் போகலாம் என்று ஒத்தடம் எல்லாம் கொடுக்கிறார்கள். இருந்தும் சேரன் கேட்கவில்லை வேலைக்கு சென்று விடுகிறார். அங்கு சேரனின் காலில் அடிபட்டு இருப்பதை அறிந்த சந்தா, அவருக்கு எண்ணெய் வைத்து நீவி விட்டு எமோஷனாக அழுகிறார். இதை பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருக்கிறது