சத்தியத்தை மீறிய சோழன், கோபத்தில் கடுமையாக நடந்து கொண்ட சேரன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் ஓனர், எதற்காக பெண்களிடம் வலிந்து பேசுகிறாய், வம்பு இழுக்கிறாய். இரண்டு பெண்கள் உன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். இப்படியே போனால் உன்னுடன் யாரும் சவாரி வர மாட்டார்கள் என்று வெளுத்து வாங்கினார். இதையெல்லாம் கேட்டு நிலா முறைத்துக் கொண்டிருந்தார். சேரன், பாண்டியன் எல்லோருமே கோபப்பட்டார்கள். அதற்குப்பின் நிலா, பல்லவனுக்காக ஒரு வாட்ச் வாங்கிக் கொடுத்தார். அதை பார்த்து பல்லவன் ரொம்பவே சந்தோசப்பட்டார்.
சோழன், அந்த பெண்கள் வேண்டுமென்று என் மீது பொய் சொல்லி இருந்தார்கள்.
நான் அப்படி இல்லை என்றெல்லாம் சொன்னார். உடனே நிலா, நீங்கள் என்ன பண்ணாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இனிமேல் எந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றார். அதற்குப்பின் பாண்டியன், பல்லவன், சேரன் மூவருமே சோழன் செய்த தவறை சுட்டிக்காட்டி திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேரன், நிலா மாதிரி ஒரு தங்கமான பெண் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்ணின் மனதை மாற்ற நீ முயற்சி செய்யவில்லை. தேவையில்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருகிறாய்.
அய்யனார் துணை:
நிலா மட்டும் இல்லையென்றால் நீ பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பாய் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பின் மறுநாள் சேரன் கோயிலுக்கு போகலாம் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்போது சேரன், இனி எந்த பெண்ணிடம் தேவையில்லாமல் பேச மாட்டேன். எல்லோருமே அக்கா தங்கை தான் என்று சொல்லி சூடத்தின் முன்பு சத்தியம் செய் என்றார். சோழன் தயங்கி தயங்கி நின்றார். சேரன் மிரட்டுவதால் சோழன் சத்தியம் செய்யப் போனார். அப்போது எதிரில் ஒரு பெண் தேங்காய் உடைக்க தடுமாறிக் கொண்டிருப்பதை சோழன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். வேறு வழி இல்லாமல் சத்தியம் செய்துவிட்டு சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் அந்த பெண்ணிற்கு தேங்காய் உடைக்க உதவி செய்கிறார். இதை சேரன், நிலா எல்லாம் பார்த்து விடுகிறார்கள். வீட்டிற்கு வந்த சேரன், சோழனை பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல் சோழன் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், இந்த முறை
சேரன் கடுமையாக சோழனை திட்டிவிட்டு செல்கிறார். பாண்டியன், பல்லவன் இருவருமே சேரனுடன் சேர்ந்து திட்டுகிறார்கள். நிலா எதுவும் பேசாமல் சோழனை முறைத்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் அவுட்டிங் செல்வதற்கு தயாராகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சந்தோசமாக வழி அனுப்பி வைக்கிறார்கள். சந்தாவும் சேரனுடன் வெளியே செல்வதால் சூப்பராக தயாராகி வருகிறார். பின் இருவரும் சேர்ந்து பைக்கில் லாங் டிரைவ் சுற்றுகிறார்கள். பின் கடைசியாக பீச்சுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.