சேரன் திருமணத்தில் நடந்த கலாட்டா, சந்தாவின் நிலைமை என்ன? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரனுக்கு போன் செய்த நிலா, சீக்கிரம் கல்லூரிக்கு வர சொன்னார். சேரனும் கல்லூரிக்கு கிளம்ப தயாரானார். இன்னொரு பக்கம் கல்லூரியில் மாணவர்களுக்கு விருதுகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பல்லவன் தன் அண்ணன் வராததால் ரொம்பவே சோகத்தில் இருந்தார். அப்போது பல்லவனும் நிறைய போட்டிகளில் வென்றிருந்தார். இதனால் நிறைய மெட்டல்களை வாங்குகிறார். சோழன், பாண்டியன், நிலா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
பல்லவன், சேரனை நினைத்து வருத்தப்பட்டார். பின் சிறந்த மாணவருக்கான டிராபியை பல்லவனுக்கு கொடுத்தார்கள். அதை வாங்கப் போகும்போது சேரன் சரியாக வந்து விட்டார். சேரனை பார்த்தவுடன் பல்லவன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் பல்லவன், நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் என் அண்ணன் தான் என்று சேரனை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார். பின் பல்லவன் தன் அண்ணன்கள், நிலாவையும் மேடைக்கு அழைத்து அவர்களை கௌரவிக்கிறார்.
அய்யனார் துணை:
சேரன்- சந்தா திருமணத்தை கோலாகலமாக நடத்த சகோதரர்கள் திட்டம் போட்டு இருந்தார்கள். வீடே திருவிழா கோலமாக இருக்கிறது. சேரனை மாப்பிள்ளை போல தயார் செய்து அழைத்து வந்தார்கள். நிலாவும் சந்தாவை அழகாக தயார் செய்து அழைத்து வந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து குரூப்பாக போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் கல்யாணத்திற்காக மொத்த குடும்பமும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு சேரன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேரன் திருமணத்திற்கு உறவினர்கள் வருகிறார்கள். எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். சேரன்-சந்தா இருவரையும் மணமேடைக்கு அழைத்து வந்து திருமணத்திற்கான சடங்குகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். சேரன் தாலி கட்டப் போகும் போது
அங்கு துப்பாக்கி சத்தம் கேட்கிறது. சந்தாவின் முறைமாமன் தன்னுடைய அடியாட்களை வைத்து கோயிலுக்குள் வந்து ரகளை செய்கிறார். எல்லோரையும் தடுத்து நிறுத்தி சந்தாவை அழைத்து செல்லப்பார்க்கிறார்.
சீரியல் ட்ராக்:
சேரன் குடும்பத்தினர் எவ்வளவு தடுக்க முயன்றுமே முடியவே இல்லை. சந்தாவின் முறைமாமன் துப்பாக்கி வைத்து இருந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பின் சந்தா-அனிஷ் இருவரையும் அவருடைய முறை மாமன் அழைத்து சென்று விடுகிறார். இதனால் சேரன் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணம் நின்றதால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்