சேரன் வாழ்க்கையில் வந்த ஹிந்தி பெண், கொந்தளிக்கும் பாண்டியன் - அய்யனார் துணை

By subhashini · 9/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சீக்கிரமாகவே விவாகரத்து வாங்கி கொண்டு தன்னுடைய கேரியரை பார்க்கணும் என்று போராடுகிறார். சோழன், எப்படியாவது நிலா மனதை மாற்றி விடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். இன்னொரு பக்கம் எப்படியாவது தன் மகளை வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று நிலாவின் அப்பா சோழனின் வீட்டிற்கு சென்று டிராமா போடுகிறார். அதை நம்பிய சோழன், நிலா இருவரும் சென்னை செல்கிறார்கள். வீட்டுக்கு போற பிறகுதான் நிலா அப்பா நாடகமாடுகிறார் என்று சோழனுக்கு தெரிகிறது. இருந்தாலும், நிலாவிற்காக பொறுத்துக் கொள்கிறார் சோழன்.

பின் நிலாவின் அப்பா ரொம்ப அவமரியாதையாக சோழனை நடத்துகிறார். இருந்தாலுமே அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் சோழன் கையில் நகை, பணத்தை கொடுத்து பேங்கில் வைக்க சொல்லி நிலா அப்பா அனுப்புகிறார். நிலாவும் தன் தந்தை மாறிவிட்டார் என்று நினைத்து கொள்கிறார். பின் நகை, பணத்தை சோழன் எடுத்து செல்லும் வழியில் ஆட்கள் வைத்து திருட வைக்கிறார் நிலா அப்பா. அதோடு சோழனையும் கடத்தி வைத்து விடுகிறார்கள். பின் சோழன் நகையை திருடி சென்று விட்டான் என்று பழி போடுகிறார் நிலா அப்பா. ஆனால், அதை நிலா நம்பவில்லை.

அய்யனார் துணை:

பின் நிலா, சேரனுக்கு போன் செய்து தகவலை சொன்னார். பின் சேரன், பாண்டியன், பல்லவன் மூவரும் சோழனை தேடி சென்றார்கள். ஒரு கட்டத்தில் சோழனை கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது நிலாவின் அப்பா தான் என்றும் தெரிந்து விட்டது. வீட்டிற்கு வந்த சோழன், அவருடைய அண்ணன், தம்பிகள் எல்லோருமே நிலாவிடம் நடந்ததை சொன்னார்கள். இதனால் கொந்தளித்த நிலா தன்னுடைய அப்பாவை திட்டி விட்டு அங்கிருந்து சோழன் மற்றும் அவருடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சோழனின் வீட்டிற்கு வந்த எல்லோருமே நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழன், அதெல்லாம் உண்மையான நகையா? என்று கேட்டார். அதற்கு நிலா, ஆமாம் அதெல்லாம் உண்மையான தங்கம் என்று சொன்னார். உடனே சோழன், நான் அதிலிருந்து ரெண்டு ஆட்டையை போட்டு விட்டேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் நிலா, நானும் அங்கிருந்து ஒன்றை திருடி விட்டேன் என்று தன்னுடைய ஆதார் கார்டை காண்பிக்க, மொத்த வீடுமுமே சந்தோஷமாக இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. இதனால் நிலா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சேரனை வேலைக்கு கிளம்ப சொல்கிறார்.
இதையெல்லாம் பார்த்த சோழன், நிலாவுடன் இருப்பதற்காக தனக்கு உடம்பு சரியில்லை என்று ட்ராமா செய்து வீட்டிலேயே தங்கி விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியனை பார்க்க அவருடைய காதலி மெக்கானிக் செட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால், பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் கோபப்பட்டு பாண்டியனின் காதலி சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சேரன், வேலை செய்யும் இடத்திற்கு அவருடைய நண்பரின் தங்கை வந்திருக்கிறார் அவருக்கு தமிழ் சுத்தமாக பேசத் தெரியாது. அவருக்கு இந்தி தான் தெரியும். இதனால் சேரனுமே தனக்கு தெரிந்த இந்தியை வைத்து அவரிடம் பேசுகிறார். இருவரும் நன்றாக சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். கடைசியில் பல்லவனுக்கு காய்ச்சல் அதிகமானதால் தன்னுடைய மாமனாரிடம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கி தர சொல்கிறார் நிலா. அவருமே வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். பின் நிலா, பல்லவனின் அம்மா பற்றிய கதையை கேட்கிறார். ஆனால், அய்யனார் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full