உண்மையை போட்டுடைத்த சேரன், கோபத்தில் வானதியை மோசமாக பேசும் பாண்டி - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிச்சயதார்த்தத்திற்காக சேரன் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சோழன்- பாண்டியன் இருவருமே தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது சேரன் இல்லாத நேரம் பார்த்து சோழன், ஜெயந்தி குடும்பத்தை பற்றி தவறாக தான் பேசினார்கள். இந்த கல்யாணம் அண்ணனுக்கு சரியா வருமா? என்று தெரியவில்லை என்றார். இதைக் கேட்டு நிலாவிற்கு குழப்பமாக இருந்தது.
நிலா, நிச்சயதார்த்தம் தான் நடக்கப்போகிறது. எதுவாக இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் தயாராகுங்கள் என்றார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி இருந்தார்கள். அப்போது சேரனுடைய பெரியப்பா, அத்தை, கார்த்திகா எல்லோருமே வந்தார்கள். பின் எல்லாருமே சேர்ந்து ஜெயந்தி வீட்டிற்கு போனார்கள். அங்கு மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பதற்கு கூட யாருமே வெளியில் இல்லை. நிச்சயதார்த்தத்திற்கான அறிகுறியும் இல்லை. யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பின் ஜெயந்தியின் அப்பா, சேரன் குடும்பத்தை வியப்பாக பார்க்கிறார். பின் அவர்களை எல்லாம் உள்ளே அழைத்து உட்கார வைத்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது நடேசன், மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு மரியாதையே இல்லையா? வாசலில் நின்று வரவேற்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டார். அப்போது ஜெயந்தியின் அப்பா, நாங்கள் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தரகர் உங்களிடம் சொல்லவில்லையா? என்றார். இதை கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். நடேசன், இது தரகரிடம் சொல்ல வேண்டிய விஷயமா? என்றார். அப்போது ஜெயந்தி அம்மா, மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். அதனால் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்றார். இதை கேட்டு சேரன் உடைந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், உங்களுக்கே நீங்கள் செய்வது நியாயமா? இப்படி கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவதா? என்று கேட்கிறார். நடேசன், கோபத்தில் கத்துகிறார். சேரனின் பெரியப்பா, அத்தை இருவருமே, இதெல்லாம் ஒரு சம்மந்தமா? இப்படித்தான் எங்களை அவமானப்படுத்துவீர்களா? என்றெல்லாம் கோபப்படுகிறார்கள். தரகர் சொல்லி இருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். எங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்று ஜெயந்தியின் அப்பா சொல்கிறார். பின் கோபத்தில் சோழன், குடும்பம் எல்லோருமே வந்துவிடுவார்கள். வீட்டிற்கு வரும் வழியில் நடேசனுக்கும், அவருடைய அண்ணன்- தங்கை இருவருக்குமே இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் வீட்டிற்கு வந்த நடேசன், இதற்கு தான் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்டாயா? என்று சேரனை திட்டுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே எதற்காக இப்படி அவசரமாக கல்யாணம் செய்தீர்கள். என்னதான் உங்களுக்கு பிரச்சனை என்று கேட்கிறார்கள். அதற்கு
சேரன், எனக்கு கல்யாணம் நடந்தால் தான் பாண்டி கல்யாணம் செய்து கொள்வான் என்று வானதியிடம் சொல்லி இருக்கான். அதனால் தான் இந்த ஏற்பாடு செய்தேன் என்கிறார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் பாண்டியன் கேட்கிறார். அதற்கு வானதி, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் கோபத்தில் பாண்டியன், வானதியை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.