ஜெயந்தி எடுத்த முடிவால் அதிர்ச்சியில் உறைந்த சேரன், நிச்சயதார்த்தம் என்ன ஆனது? அய்யனார் துணை

By subhashini · 15/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் நிலா செய்து கொண்டிருந்தார். அப்போது நிச்சயதார்த்தத்திற்கு சேரன் தன்னுடைய பெரியப்பா, அத்தையும் அழைக்க சென்றார். அவர்கள், சேரனை திட்டி அனுப்பினார்கள். ஆனால் கார்த்திகா, கண்டிப்பாக நான் வருகிறேன் என்றார். இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் இருவருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி விசாரிக்க அவருடைய ஊருக்கு சென்று இருந்தார்கள்.

சோழன்- பாண்டியன் இருவருமே ஜெயந்தி வீட்டை சுற்றி எல்லா இடங்களிலும் விசாரித்தார்கள். எல்லோருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி மோசமாகத்தான் சொன்னார்கள். இதனால் சோழன், பாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் கார்த்திகா, தன்னுடைய அம்மா- மாமாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு வர சம்மதம் சொன்னார்கள்.
அதோடு நிச்சயதார்த்தத்துக்கு என்னென்ன தேவை, எப்போது போகணும் என்ற விவரங்களை எல்லாம் கார்த்திகாவின் அம்மா சொன்னார்.

அய்யனார் துணை:

இதையெல்லாம் நிலா கவனித்துக் கொள்கிறார். அதற்குப்பின் நிச்சயதார்த்தத்திற்காக சேரன் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சோழன்- பாண்டியன் இருவருமே தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது சேரன் இல்லாத நேரம் பார்த்து சோழன், ஜெயந்தி குடும்பத்தை பற்றி தவறாக தான் பேசினார்கள். இந்த கல்யாணம் அண்ணனுக்கு சரியா வருமா? என்று தெரியவில்லை என்றார். இதைக் கேட்டு நிலாவிற்கு குழப்பமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, நிச்சயதார்த்தம் தான் நடக்கப்போகிறது. எதுவாக இருந்தாலும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் தயாராகுங்கள் என்று சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி இருக்கிறார்கள். அப்போது சேரனுடைய பெரியப்பா, அத்தை, கார்த்திகா எல்லோருமே வருகிறார்கள். பின் எல்லாருமே சேர்ந்து ஜெயந்தி வீட்டிற்கு போகிறார்கள். அங்கு மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பதற்கு கூட யாருமே வெளியில் இல்லை. நிச்சயதார்த்தத்திற்கான அறிகுறியும் இல்லை. யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. பின் ஜெயந்தியின் அப்பா, சேரன் குடும்பத்தை வியப்பாக பார்க்கிறார். பின் அவர்களை எல்லாம் உள்ளே அழைத்து உட்கார வைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது நடேசன், மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு மரியாதையே இல்லையா? வாசலில் நின்று வரவேற்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்கிறார். அப்போது ஜெயந்தியின் அப்பா, நாங்கள் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தரகர் உங்களிடம் சொல்லவில்லையா? என்று கேட்கிறார். இதை கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். நடேசன், இது தரகரிடம் சொல்ல வேண்டிய விஷயமா? என்று கேட்கிறார். அப்போது ஜெயந்தி அம்மா, மாப்பிள்ளை மன்னிப்பு கேட்டு ஜெயந்தியுடன் சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். அதனால் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம் என்கிறார். இதை கேட்டு சேரன் உடைந்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full