கோபத்தில் பாண்டியனை அறைந்த சேரன், வானதி என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சேரன் எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்துமே நிலா கேட்கவில்லை. தன் குடும்பத்திற்காக செய்வேன் என்று உறுதியாக நின்று நிலா தீச்சட்டி எடுத்துக்கொண்டு சென்றார். பின் செல்லும் வழியில் நிலாவால் முடியவில்லை. இருந்தாலுமே நிலாவிற்கு பார்த்து பார்த்து சோழன் கவனித்தார். ஒரு வழியாக பரிகாரத்தை நிலா செய்து முடித்தார். அதற்குப்பின் நிலாவின் கையில் புண் அதிகமானதால் அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து. ரொம்பவே சோழன் வேதனைப்பட்டார்.
வானதி, என்னுடைய வயிற்றில் பாண்டியன் குழந்தை இருக்கிறது. வேணும் என்றால் ஹாஸ்பிடலுக்கு என்னை அழைத்துப் போங்கள். இதற்கு சம்மதம் என்றால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இதைக் கேட்ட வசந்த் பார்த்த மாப்பிள்ளை பயந்து ஓடி விட்டார். வானதியின் குடும்பத்தினர் எல்லோருமே ஆடிப் போய் விட்டார்கள். வானதி உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பின் சோழன், நிலாவை சைக்கிளில் அழைத்து கொண்டு ஊர் சுற்றினார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் கோவிலில் சேரன் குடும்பம் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது அய்யனார் சாமி வந்து குறி சொன்னார். அப்போது சாமி, சேரனை அழைத்து நீ நினைத்து என்னை தேடி வந்ததுக்கான காரணம் நிறைவேறும். சந்தோஷமாக செல் என்றார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த வானதியின் அம்மா, அப்பா எல்லோருமே ரொம்ப எமோஷனலாக அழுதார்கள். வானதி உண்மை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி உண்மையை சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பயங்கரமாக கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வானதி அம்மா, பாண்டியனுக்கு போன் செய்து, நீ நல்லாவே இருக்க மாட்டாய். என் மகளை கர்ப்பமாக்கிவிட்டு நீ நிம்மதியாக இருக்கிறாயே என்றெல்லாம் திட்டுகிறார். ஆனால், பாண்டியனுக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் சேரனிடம் வானதியின் அம்மா- அப்பா இருவருமே போன் செய்து சண்டை போடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் வானதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். இதைக் கேட்டு சேரன் ஷாக் ஆகி பாண்டியனை அடிக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றுமே புரியவில்லை. பாண்டியனுக்குமே என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார். அதற்குப்பின் பாண்டியன் வானதிக்கு போன் செய்து, நீ கர்ப்பமாக இருக்கிறாயா? நமக்குள் ஒன்னும் நடக்கவில்லையே? என்று விசாரிக்கிறார். ஆனால் வானதி உண்மை சொல்லாமல் சிரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.