சேரனுக்கு ஜாதகம் எழுத போராடும் சோழன்- நிலா, நடேசன் செய்த அட்ராசிட்டி - அய்யனார் துணை

By subhashini · 4/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் கல்யாணத்தை பற்றி நிலா பேச, வீட்டில் எல்லோருமே அமைதியாக இருந்தார்கள். அதற்குப்பின் ரோட்டில் சேரன் பெண்களுடன் கதை பேசி கொண்டு காய்கறி வாங்குவதை பார்த்து சோழன் திட்டினார். இன்னொரு பக்கம் பல்லவன், நிலா இருவருமே பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நிலா, பல்லவனிடம் விசாரித்தார். அத்ற்கு பல்லவன், எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

பாண்டியன், வானதி இருவருமே ரொம்ப ஜாலியாக தங்களுடைய திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் நிலா போன் செய்ததால் சோழன் போனார். பின் சோழன்-நிலா இருவருமே ஒரு ஹோட்டலுக்கு நிலாவின் அம்மாவை சந்திக்க போனார்கள். அங்கு நிலாவின் அம்மா, அண்ணி இருவருமே இருந்தார்கள். அப்போது நிலாவின் அம்மா - அண்ணி இருவருமே விவாகரத்து அப்ளை செய்திருக்கிறீர்களா? திருமணம் ஆகி நான்கு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் விவாகரத்தா? இதற்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தார்.

அய்யனார் துணை:

உடனே நிலா, எப்படி இந்த விவாகரத்து விஷயம் இவர்களுக்கு தெரியும் என்று புலம்பினார். அப்போது சோழன், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்தார். அதில் சோழன் தான் தன்னுடைய அப்பாவின் மொபைலில் இருந்து நிலாவின் அம்மாவிற்கு போன் செய்து விவாகரத்து பற்றி சொல்லி இருந்தார். ஆனால், அந்த உண்மை நிலாவின் அம்மாவிற்கு தெரியவில்லை. ஒரு வழியாக சோழன் செய்த வேலை யாருக்குமே தெரியவில்லை. அதற்கு பின் பாண்டியனிடம், வானதியின் அண்ணன் வசந்த் வம்பிழுத்தார். பாண்டியன், வானதி தான் என் பொண்டாட்டி என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, பாண்டியனிடம் பேசுவதை பிடிக்காமல் வசந்த் வீட்டில் சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே வழக்கம் போல வானதியை திட்டுகிறார்கள். அதற்கு வானதி, நீங்கள் என்ன சொன்னாலும் நான் பாண்டியனுடன் தான் பேசுவேன். அவனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் சேரனின் திருமணத்தை பற்றி நிலா பேசுகிறார். அப்போது தரகர், ஜாதகம் கேட்கிறார் என்று சோழன் சொல்கிறார். சேரனுக்கு ஜாதகம் இல்லாததால் என்ன செய்வது என்று புரியாமல் எல்லோருமே குழம்பி விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது சேரன் பிறந்த தேதி ஜாதகத்தை பற்றி கேட்கிறார்கள். அதற்குப்பின் பிறந்த நேரம் தெரிந்தால் ஜாதகம் எழுதிவிடலாம் என்று எல்லோரும் பேசுகிறார்கள். அதற்கு நடேசனிடம் சேரன் பிறந்த நேரத்தை கேட்கிறார்கள். நடேசன், அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் நைட்டில் தான் பிறந்தான். அதை வைத்து ஜாதகம் எழுதிக் கொள் என்று நக்கலாக சொல்லிவிட்டு செல்கிறார். உடனே சோழன், சேரன் அண்ணனுக்கு ஒரு நல்ல ஜாதகத்தை எழுதி பெண் வீட்டில் கொடுத்து விடலாம் என்றெல்லாம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full