விவாகரத்து கேஸை நினைத்து பீதியில் இருக்கும் சோழன், நிலா முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சண்டையை நிறுத்தி உங்கள் விஷயத்தில் தலையிட்டது தவறுதான் என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சோழனை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து பாண்டியன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். நிலா அமைதியாக இருந்தார். அப்போது நடேசன், உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன். யாரும் எங்கும் போகக்கூடாது. வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி விட்டு சென்றார். ஒரு இடத்தில், நடேசன் ஒரு டெம்போ வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அதை பார்த்து சோழன், பாண்டியன், சேரன், நிலா எல்லோருமே சாக் ஆனார்கள்.
நடேசன், என்னுடைய புது வண்டி இதுதான். வண்டி எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்? சகோதரர்கள் நான்கு பேருமே எப்படி வாங்கினீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நடேசன், உன் அம்மாவின் நகையை வைத்து தான் நான் இந்த வண்டியை வாங்கினேன் என்றார். இதனால் சோழன், பாண்டியன் எல்லோரும் நடேசனை திட்டினார்கள். உடனே நடேசன், மீதி 4 லட்சம் பணத்தை நீங்கள் நான்கு பேரும் தான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டை விட்டு காலி பண்ணுங்கள் என்றார். நான்கு பேருமே பணம் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள்.
அய்யனார் துணை:
வண்டி கொடுத்தவர், நான்கு பேர் இடமும் பணத்தைக் கேட்டு நின்றார்கள். சேரன், ஒரு மாதம் கால அவகாசம் கேட்டார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் நாங்கள் வேற ஏதாவது முடிவெடுப்போம் என்று வண்டி கொடுத்தவர்கள் மிரட்டி விட்டு சென்றார்கள். நடேசன், ஒழுங்கு மரியாதையாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நிலா, இப்ப இருக்கும் சூழலில் இதெல்லாம் தேவையில்லை. எதற்காக இப்படி செய்வீர்கள் என்றார். நடேசன், எல்லாம் தெரிந்துதான் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதற்கான ஏற்பாடு செய்தார்கள். வானதி, சீக்கிரம் என்னுடைய திருமணம் நடக்கணும் என்றார். பின் விவாகரத்து வழக்கு நடக்க இருப்பதால் நிலா- சோழன் இருவரும் வக்கீலை சந்தித்து பேசி விட்டு வந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நாளை கோர்ட்டில் நம்ம விவாகரத்துக்கே முடிந்துவிடும். நீங்களும் இருவரும் வேண்டாம் என்று சொல்லப் போகிறோம் என்கிறார். நிலா, ஒருவேளை நான் விவாகரத்து வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார். சோழன், நான் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதா? ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழனிடம் பாண்டியன் விசாரிக்கிறார். சோழன், எனக்கு கோர்ட்டில் என்ன நடக்குமோ? பயமாக இருக்கிறது. நிலா விவாகரத்து வேண்டாம்ன்னு சொல்லணும் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன், வானதியின் வீட்டிற்கு செல்கிறார். ஆனால், வானதி வீட்டுக்குள் போகாமல் வெளியேவே நின்று கொண்டிருக்கிறார். வானதி, ஏதாவது சொல்லுவாள் என்று அங்கிருந்து பாண்டியன் கிளம்பி வந்து விடுகிறார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக சோழன்- நிலா இருவரும் தயார் ஆகிறார்கள். அப்போது நிலாவை சந்தித்து சேரன் பேசுகிறார். நிலா, பயப்படாதீர்கள் நான் விவாகரத்து வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். கவலைப்படாதீர்கள், தைரியமாக இருங்கள் என்று சொல்கிறார். சேரனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.