கோர்ட்டுக்கு போக மறுத்த நிலா, சந்தோஷத்தில் பறக்கும் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சந்தா மிதுள்ள காதலால் சிரித்துக்கொண்டே இருந்தார். இதையெல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. பின் நன்றாக இருக்கிறீர்களா? என்று விசாரித்தார்கள். ஆனால், சேரன் ஒன்றுமே இல்லை. சாப்பிட்டு தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா, சோழனை தனியாக அழைத்து பேச கூப்பிட்டார். சோழன், நிலா தன்னிடம் காதலை சொல்லி சந்தோஷமாக பேச போகிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டு ரூமுக்குள் போனார்.
அப்போது நிலா, போன்ற முறை சேரன் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டார். இந்த முறை யாரும் தூங்காமல் சேரன் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு சோழனுக்கு கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி சோழன் தன்னுடைய மற்ற இரண்டு தம்பிகளிடம் சொன்னார். அவர்களுமே தன் அண்ணனை பார்த்துக் கொள்வதற்கு சம்மதித்தார்கள். ஆனால் சேரன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
சேரன் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவாரோ என்று பயத்தில் அவருடைய மூன்று தம்பிகளும் பிளான் பண்ணி தூங்காமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். முதலில் பாண்டியன் தான் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சோழன்-பல்லவன் இருவரும் தூங்கிவிடுகிறார்கள். பின் தன்னுடைய நேரம் முடிந்துவிட்டு சோழனை பாண்டியன் எழுப்பினார். ஆனால், சோழன் எழவே இல்லை. பல்லவநனும் எழுப்ப எழுப்ப நன்றாக தூங்கி கொண்டு இருக்கிறார். பின் வேறு வழியில்லாமல் வாசலின் கதவில் காலை வைத்து கொண்டு சேரன் வெளியே போக முடியாத அளவு பாண்டியன் தூங்கி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்கிறார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் செல்கிறார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு அனீஸ், சந்தாவை பெண் கேட்ட விஷயத்தை பற்றி சோழனிடம் சொல்கிறார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
https://www.youtube.com/watch?v=a5BO5LZExiY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சோழன், டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வர இருக்கிறது. கோர்ட்டுக்கு போகணும் என்று சொல்கிறார். அதற்கு நிலா, நான் கோர்ட்டுக்கு போகவில்லை என்கிறார். அதற்கு சோழன், என்ன ஆனது? ஏன் போகவில்லை என்று கேட்கிறார். நிலா, எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே சென்று விடுகிறார். சோழன், அவளுக்கு விவாகரத்து வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், இப்போது வாங்கவில்லை. அவளுக்கு என் மீது காதல் வந்துவிட்டது என்றெல்லாம் சொல்லி பாண்டியனிடம் சொல்லி சந்தோசப்படுகிறார்.