சோழன் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான நிலா, சேரன் திருமணம் நடக்குமா? அய்யனார் துணை

By subhashini · 14/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா கோபப்பட்டு சோழனை அங்கிருந்து அழைத்துச் சென்றார். அதற்குப்பின் வீட்டிற்கு நிலா-சோழன் இருவரும் வந்து விட்டார்கள். பின் தாங்கள் வாங்கிய பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து அடுக்கி வைத்தார்கள். இதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்குப்பின் மீண்டும் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து சண்டை வாங்கினார். கோபத்தில் பாண்டியன், இனிமேல் எனக்கு போனை செய்து விடாதே என்றார்.

வீட்டிற்கு தேவையான பொருள்களை எல்லாம் நிலா தன்னுடைய காசில் வாங்கியதால் பாண்டியன் கோபப்பட்டு சோழனிடம் சண்டை போட்டார். சோழன், நிலா வீட்டுக்காக செய்ததில் எனக்கு சந்தோசம் தான் என்றார். அதற்கு பாண்டியன், கேவலமாக இல்லையா? உன்னுடைய காசு ஒரு ரூபாய் கூட செலவு பண்ண மாட்டியா? என்று இருவரும் சட்டையை பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டார்கள். அப்போது வந்த நிலா, இருவர் மீதும் தண்ணீர் ஊற்றிவிட்டு அமைதியாகவே இருக்க முடியாதா? இப்படியே இருந்தால் இந்த வீட்டிற்கு எப்படி இன்னொரு பெண் வந்து தங்குவார் என்றெல்லாம் கேட்டார்.

அய்யனார் துணை:

இதனால் சோழன்- பாண்டியன் இருவரும் அமைதியாக இருந்தார்கள். அதற்குப்பின் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் நிலா செய்து கொண்டிருந்தார். அப்போது நிச்சயதார்த்தத்திற்கு சேரன் தன்னுடைய பெரியப்பா, அத்தையும் அழைக்க சென்றார். அவர்கள், சேரனை திட்டி அனுப்பினார்கள். ஆனால் கார்த்திகா, கண்டிப்பாக நான் வருகிறேன் என்றார். இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் இருவருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி விசாரிக்க அவருடைய ஊருக்கு சென்று இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன்- பாண்டியன் இருவருமே ஜெயந்தி வீட்டை சுற்றி எல்லா இடங்களிலும் விசாரிக்கிறார்கள். எல்லோருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி மோசமாகத்தான் சொல்கிறார்கள். இதனால் சோழன், பாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் கார்த்திகா, தன்னுடைய அம்மா- மாமாவை அழைத்துக் கொண்டு சேரன் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு வர சம்மதம் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதோடு நிச்சயதார்த்தத்துக்கு என்னென்ன தேவை, எப்போது போகணும் என்ற விவரங்களை எல்லாம் கார்த்திகாவின் அம்மா சொல்கிறார். இதையெல்லாம் நிலா கவனித்துக் கொள்கிறார். அதற்குப்பின்
நிச்சயதார்த்தத்திற்காக சேரன் தயாராகிக் கொண்டிருக்கிறார். அப்போது சோழன்- பாண்டியன் இருவருமே தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது சேரன் இல்லாத நேரம் பார்த்து சோழன், ஜெயந்தி குடும்பத்தை பற்றி தவறாக தான் பேசுகிறார்கள். இந்த கல்யாணம் அண்ணனுக்கு சரியா வருமா? என்று தெரியவில்லை என்கிறார். இதைக் கேட்டு நிலாவிற்கு குழப்பமாக இருக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full