ட்ரிப்பில் சோழன் சொன்ன காதல் கதை, பரிதாபப்படும் நிலா - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், தன்னுடைய காதலையும் தன்னுடைய ஆசையும் சொல்லி அழுதார். நிலாவுமே சோழனுடைய எமோஷனை புரிந்து கொண்டு ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், தன்னுடைய அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி அழுதார். வீட்டில் எல்லோருமே சோழனுக்கு ஆறுதல் சொன்னார்கள். அதற்குப்பின் சேரன், எல்லா வீட்டு வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தார். பாண்டியன் அவருக்கு உதவி செய்தார்.
பாண்டியன், பல்லவனிடம் பேச சொன்னார். ஆனால், சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் நிலா-சேரன் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் சோழன் நடந்ததை நினைத்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சோழனுக்கு ஓனர் போன் செய்து ஒரு வாடைக்குப் போக சொன்னார். ஆனால், சோழனுக்கு மனசே இல்லை. அப்போது வானதி வந்தார்.
அய்யனார் துணை:
வானதி, சோழனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சோழன், தான் திருடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் வானதி ஷாக் ஆனார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை தனியாக அழைத்துச் சென்று நடந்ததை எல்லாம் சொன்னார். வானதி, சோழனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழன் ட்ரிப் போகும் விஷயத்தை சொன்னார். நிலா நானும் அந்த ட்ரிப்புக்கு வருகிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நிலா இருவரும் அந்த வயதான ஜோடியை ட்ரிப்புக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் அந்த வயதான ஜோடி நிலாவிடம் கல்யாணமானதை பற்றி எல்லாம் கேட்கிறார்கள். சோழன், வழக்கம் போல தங்களுடைய காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாகவும் உண்மையில் நடந்தது போலவே சொல்கிறார். அதை அவர்களும் நம்புகிறார்கள். நிலா முறைக்கிறார். இன்னொரு பக்கம் பல்லவன், காயத்ரி இருவரும் சந்தித்து தங்கள் செய்த தவறை உணர்ந்து பேசுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பல்லவன் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் சேரன், சந்தாவை பார்க்க போகிறார். அப்போது சந்தாவிடம், அவர் பெற்றோர் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் விஷயத்தை சொல்லி அழுகிறார். சேரனும் சந்தாவிற்கு ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் நிலா, சோழன் வயதான தம்பதி எல்லோரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். அப்போது சோழன்,
டிரைவராக போகும்போது தான் படுக்க இடம் இல்லாமல் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே வருத்தப்படுகிறார்.