விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கும் சோழன், நிலா சொன்ன வார்த்தை - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், எங்களை சின்ன வயதில் இருந்து வளர்த்தது நீங்கள் தான். நாங்கள் இப்படி இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்றார். வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வானதி வந்தார். கடைக்கு தன் அண்ணன் பெயரை வைத்திருப்பதை பார்த்து கோபப்பட்டார். பின் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் வானதி அமைதியாகவே இருந்தார். அதற்குப்பின் சந்தா, அனீஸ் இருவரும் கடைக்கு வருகிறார்கள். சந்தாவை பார்த்து சேரன் ரொம்பவே வெட்கப்பட்டார்.
நடேசன் பனியில் தூங்கி கொண்டிருந்ததால் நிலா அவரை உள்ளே படுக்க சென்றார். அதற்குப் பின் நிலா, நாளை கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்க இருக்கிறது. இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். சோழன் ரொம்பவே ஷாக் ஆனார். அதற்கு பின் சோழன், கண்டிப்பாக விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்டார். அதற்கு நிலா, எனக்கு விவாகரத்து வேண்டும். உங்களுடன் சேர்ந்து வாழ சொல்கிறீர்களா? என்றார்.
அய்யனார் துணை:
இதைக் கேட்டவுடன் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். அடுத்த நாள் நிலா-சோழன் இருவரும் கோர்ட்டுக்கு சென்றார்கள். அங்கு விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வேண்டுமா? என்று கேட்டார். நிலா பதில் சொல்வதற்கு முன் சோழன் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என்றார். இதை கேட்டு நிலா ஷாக் ஆனார். அதற்குப்பின் நீதிபதி, நிலாவிடம் விசாரிக்கிறார். நிலாவும் ஆமாம் என்று சொல்லிவிட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கவுன்சிலிங்கில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சோழன், நிலாவின் மனதை மாற்றத்தான் இப்படியெல்லாம் பேசுகிறார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனிடம் சேரன் கோர்ட்டில் நடந்ததை விசாரிக்கிறார். அதற்கு சோழன், விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
சீரியல் ட்ராக்:
அவர்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லை என்று மீண்டும் டிராமா போடுகிறார்.
இது எல்லாம் கவனித்த நடேசன், சோழனிடம் தனியாக சந்தித்து விசாரிக்கிறார். சோழன் மீண்டும் டிராமா போடுகிறார். உடனே நடேசன், உன்னை பற்றி எனக்கு தெரியும். ஆனால், நீ செய்வது ரொம்ப தவறு. நிலா மனம் மாற வாய்ப்பில்லை என்று திட்டி விட்டு செல்கிறார். அதற்குப்பின் சேரன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சேரன், சோழனுடன் சேர்ந்து வாழ சொல்லி எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். கடைசியில் நிலா, இருவருக்கும் பிடிக்காமல் நடந்த திருமணம் தான். விவாகரத்து வாங்குவது தான் சரியான முடிவு என்று சொல்கிறார்.