சோழன் சொன்ன வார்த்தையால் டென்ஷனான நிலா, வானதி வீட்டில் நடந்த கலவரம் - அய்யனார் துணை

By subhashini · 4/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி வீட்டிற்கு வரவில்லை என்று அவருடைய அப்பா, அம்மா எல்லோருமே பதட்டமாகி புலம்பி கொண்டிருந்தார்கள். வானதியின் அண்ணன், பாண்டியன் இடம் வேலை செய்பவரிடம் சென்று விசாரித்தார். இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் ராகவ கொடுத்த வாட்ச்சை பற்றி பேச வந்தார். சோழன் கடுப்பாகி கோபப்படுகிறார். அதற்குப்பின் ராகவ், நிலாவிற்கு தொடர்ந்து மெசேஜ் போட்டுக் கொண்டே இருந்தார். அதை எல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வந்தது. எந்த ரிப்ளையும் செய்யாமல் போனை வைத்து விட்டார்

வானதி, பாண்டியன் இருவரும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்கள். பாண்டியன், ஏதாவது பிரச்சனை வருமா? என்று பயத்திலேயே வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் வானதியின் பெற்றோர்கள், பாண்டியன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். சோழன், சேரன் எல்லோருமே பாண்டியன் மீது தவறு இருக்காது என்றெல்லாம் சொன்னார்கள். கோபத்தில் வானதியின் அம்மா, சேரன் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.

அய்யனார் துணை:

பின் சேரன், பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை சென்றார். அப்போது பாண்டியன், வானதி என்னுடன் தான் இருக்கிறார் என்றார். பின் சேரன், வானதி அம்மாவிடம் உண்மையை சொன்னார். கோபத்தில் வானதியின் அம்மா பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், உன்னால் தான் என்னுடைய குடும்பம் அவமானப்பட்டு இருக்கிறது. இதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். வானதி, உனக்கு இப்பவும் உன்னுடைய குடும்பம் தான் முக்கியமா? என்று சண்டை போட்டார். பின் பாண்டியன், வானதியை அவருடைய வீட்டில் விட்டார்.

இன்றைய எபிசோட் :

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியை அவருடைய அம்மா அடிக்கிறார். அப்போது பாண்டியன், மன்னித்து விடுங்கள். வானதி சொல்லியும் நான் செய்தது தவறுதான். உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. வானதியை அடிக்காதீர்கள் என்று ரொம்ப தன்மையாக பேசுகிறார். வானதியின் அண்ணன் கோபப்பட்டும் பாண்டியன் அமைதியாக மன்னிப்பு கேட்டு விட்டு செல்கிறார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் இடம் சேரன் விசாரிக்கிறார். அப்போது பாண்டியன், நடந்தது எல்லாம் சொல்லி வீட்டில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சோழன், நிலா விஷயத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். இதனால் நிலா விசாரிக்கிறார். அப்போது சோழன், நீங்கள் ராகவ் உடைய ஆளாம். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார். ஃபோனில் ஸ்டேட்டஸில் கிஸ், ஹார்ட்டு சிம்பல் எல்லாம் வைத்திருக்கிறார் என்று கோபமாக பேசுகிறார். இருந்தாலும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று திட்டுகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடக்கிறது. இதையெல்லாம் பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full