சோழனால் வானதி-பாண்டியன் இடையே வெடிக்கும் பூகம்பம், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 13/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவிடம் அந்த வேலையைப் பற்றி வானதி விசாரித்தார். வானதி, இந்த வீட்டில் எல்லோருக்கும் உங்களை பிடிக்கிறது. என்னை அப்படி நடத்துவார்களா? என்று தெரியவில்லை. எல்லோரும் என் மீது கோபம்தான் படுகிறார்கள் என்றார். நிலா, அப்படியெல்லாம் கிடையாது என்றார். இதை எல்லாம் பார்த்த பாண்டியன், பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்பட்டார். நிலா சென்றவுடன் வானதி, எதற்காக வீட்டு பத்திரத்தை வைக்கணும். உன்னுடைய தொழிலுக்கு யாராவது இப்படி செய்தார்களா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

வானதி, பாண்டியன் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை சோழன் பார்த்தார். பின் சோழன், பாண்டியனை அங்கிருந்து அழைத்து வந்தார். அதற்குப்பின் வானதி கிளம்பி விட்டார். அதற்கு பின் கடையில் பாண்டியன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த சோழன் விசாரித்தார். அப்போது பாண்டியன், எதற்கு எடுத்தாலும் சண்டை வருகிறது. அவள் இருந்தாலும் கஷ்டம், இல்லை என்றாலும் கஷ்டம் என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வானதி வந்தார்.

அய்யனார் துணை:

அப்போது சோழன், நான் வானதியிடம் பேசிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு வானதியை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது வானதி, நான் ஸ்டாப்பாக பேசி கொண்டே வந்தார். சோழனால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் டென்ஷன் ஆனார். இன்னொரு பக்கம் பல்லவன் ரொம்பவே வருத்தமாக இருந்தார். அப்போது நிலா, அவருக்கு தைரியப்படுத்தி ஆறுதல் சொன்னார். அதோடு காயத்ரியின் நிலைமையை பற்றியும் விசாரித்தார். அப்போது பல்லவன், நான் காயத்ரியை காதலிக்கிறேன் என்று உண்மையை சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், வானதியை மீண்டும் பாண்டியன் கடைக்கு அழைத்து வருகிறார். அப்போது சோழன், இவளுடன் பேசினால் பைத்தியம் தான் பிடிக்கும். உன்னைப் பற்றி எவ்வளவு
பெருமையாக சொன்னாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறாள். இவளுடன் வாழ்வதெல்லாம் பெரிய கஷ்டமான விஷயம் என்றெல்லாம் சொல்கிறார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சோழனால் வானதி, பாண்டியன் இடையே சண்டை ஏற்படுகிறது. சோழன், இதுதான் சந்தர்ப்பம் அவளை விட்டுவிடு என்கிறார். பாண்டியனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நடேசன், சேரன், சோழன் மூவருமே பேங்கில் பணம் கேட்பதற்காக சென்றிருக்கிறார்கள். அங்கு வீட்டு பத்திரம் சரியாக இல்லாததால் பணம் தர முடியாது என்கிறார்கள். வீட்டிற்கு வந்த சேரன் பேங்கில் நடந்ததை எல்லாம் நிலாவிடம் சொல்கிறார். நிலா, நான் வேலையை தேடிக் கொள்கிறேன். தயவு செய்து பத்திரத்தை எல்லாம் வைக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். பாண்டியன், எனக்கு தெரிந்த இடத்தில் பணம் கேட்டிருக்கிறேன் என்கிறார். சோழன்-சேரன் இருவருமே தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full