சோழன் செய்த பித்தலாட்ட வேலை, கொந்தளிக்கும் அய்யனார் குடும்பம் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ரூமுக்குள் சென்ற வானதி, பாண்டியனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சோழன் சென்ற கார் விபத்து ஏற்பட்டதாக சேரனுக்கு போன் வருகிறது. இதை சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழியிடம் தனக்கு திருமணமான கதை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது பல்லவன், சோழனுக்கு நடந்த விஷயத்தை பற்றி சொன்னார். நிலாவும் பதறி அடித்து கொண்டு கிளம்பினார்.
நிலா, பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார். சோழன் தலையில் கை, காலில் எல்லாம் அடிப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து நிலாவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. சோழன் ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருந்தார். நிலா, ஒன்னும் இல்லை. நீங்கள் தைரியமாக
இருங்கள் ஒன்றும் ஆகாது என்றார். அதற்குப்பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனுடைய காதலை சொல்லி புரிய வைத்தார்கள். அதோடு சோழன் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டார்கள். நிலா, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அதற்கு பின் தன் தோழியிடம் நிலா, என்ன செய்வது என்று புரியவில்லை என்றார்.
அய்யனார் துணை:
நிலாவின் தோழி, எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக யோசி என்றார். அதற்கு பின் நிலா, உங்களுக்கு ஆறு மாதம் ஆகாசம் கொடுக்கிறேன். அதற்குப்பின் செட் ஆகவில்லை என்றால் நான் சென்று விடுவேன் என்றார். சோழன் சந்தோஷத்தில் எழுந்து நின்று துள்ளி குதித்தார். அதை பார்த்து நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சேரன்- பாண்டியன் குழம்பி நின்றார்கள். சோழனின் ஓனர் அமைதியாக படு என்றார். சோழனுமே அடிபட்டது போல் மீண்டும் நடித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன், உண்மையை சொல் உனக்கு அடிபட்டு இருக்கா, நடிக்காதே என்று கேட்கிறார். சேரன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே சோழனிடம் விசாரிக்கிறார்கள். நிலாவுமே கோபப்பட்டு திட்டுகிறார். சோழன், மீண்டும் மீண்டும் வலி இருப்பது போலவே நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சோழனின் ஓனர் உண்மையை சொல்லி விடுகிறார். நான் தான் இப்படி செய்ய சொன்னேன். நிலா- சோழனை சேர்த்து வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று சொல்கிறார். இதனால் கொந்தளித்த நிலா, நீ திருந்தவே மாட்டாய்.
சீரியல் ட்ராக்:
நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொல்கிறார். சோழன், வழியை மறைத்து நிலாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நிலா, உனக்கு ஆறு மாதம்தான் அவகாசம். நீ மீண்டும் பொய் சொல்லி ஏமாற்றி இருந்தாய் நான் உன்னை விட்டு சென்று விடுவேன் என்று ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். இதனால் சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் சேரன், நடேசன் எல்லோருமே சோழன் செய்த தவறை மன்னிக்காமல் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின் எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு வருகிறார்கள்