உண்மையை போட்டு உடைத்த நிலா, கோபத்தில் வீட்டை விட்டு போன சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 29/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்றார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.

சோழன், நிலா என்னை கட்டிப்பிடித்து காதலை சொன்னார் என்றார். இதைக் கேட்டு பல்லவன், பாண்டியன் நம்பவில்லை. இருந்தாலும் சோழன் நடந்ததில் பாதி உண்மை பாதி கதையை சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ராகவ், நான் டென்ஷனில் உங்களிடம் கோபப்பட்டு விட்டேன். இருந்தாலும் ப்ராஜெக்ட் நல்லபடியாக முடிந்தது. எல்லோரும் பாராட்டினார்கள் என்று சொல்லி ட்ரீட் கொடுப்பதாக சொன்னார். ஆபீசில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், நிலா மட்டும் பார்ட்டிக்கு வரவில்லை என்றார்.

அய்யனார் துணை:

பின் ராகவ் கட்டாயப்படுத்தி நிலாவை பார்ட்டிக்கு அழைத்து சென்றார். ஹோட்டலில் ராகவ், நிலாவை மட்டும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். அதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பிடிக்கவில்லை. ஆபீஸில் எல்லோருமே ராகவ், நிலாவை கவனிப்பதை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு கஷ்டமாக இருந்தது. பின் நிலா, சோழனை ஹோட்டலுக்கு வந்து அழைத்துச் செல்ல வர சொன்னார். சோழனும், நிலா இருக்கும் இடத்திற்கு சென்றார். பின் நிலா, நான் கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ராகவ் முகம் மாறுகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா கிளம்பியவுடன் ராகவும் வருகிறார். இதை பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா காரில் உட்கார்ந்தவுடன் ராகவ், நிலா நான் பார்க்கும் பொண்ணு. புரியலையா என்னுடைய ஆளு கவனமாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் சோழனுக்கு பயங்கர கோபம் வருகிறது. இருந்தாலும் அமைதியாக இருக்கிறார். பின் ராகவ், நிலாவை பற்றி பேசிக் பேசிக்கொண்டிருக்கிறார். சோழன், எல்லாம் எனக்கு தெரியும் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம் எல்லோருமே ப்ராஜெக்ட்டை பற்றி விசாரிக்கிறார்கள்.

சீரியல் ட்ராக் :

அப்போது சோழன் ஐ லவ் யூ சொன்ன கதை எல்லாம் சொல்கிறார்கள். இதை கேட்டு நிலாவிற்கு கோபம் வருகிறது. நிலா, நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஹக் மட்டும்தான் பண்ணேன் என்று சொல்கிறார். இதனால் பல்லவன், பாண்டியன் எல்லோருமே மாறி மாறி சோழனை கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபப்பட்ட சோழன் எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போகிறார். அதற்குப்பின் சோழன் வீட்டிற்கு வருகிறார். இருந்தாலும் சோழன் வந்தது தெரியாமல் பாண்டியன் குறை பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட சோழன், மீண்டும் எல்லோரிடமும் சண்டை போட்டு வெளியே போகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full