பாஸை வீட்டிற்கு அழைத்து வந்த நிலா, கோபத்தில் சோழன் போடும் சபதம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனை பார்ப்பதற்கு நிலா வீட்டுக்கே வந்தார். நிலாவை பார்த்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். பல்லவன், இங்கேயே இருங்கள். நீங்கள் இல்லாததால் எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது என்றெல்லாம் சொன்னார். அதற்கு நிலா, நான் உன்னை பார்த்துவிட்டு போகிறேன் என்றார். அதற்குப்பின் நிலா வேலைக்கு கிளம்பினார். அவருக்கு துணையாக சோழன் வந்தார். அப்போது சோழன், நீங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள்.
நான் வேண்டுமென்றால் வீட்டை விட்டு போகிறேன் என்று ஏதேதோ பேசி நிலாவை சமாதானம் செய்யப்பார்த்தார். ஆனால், நிலா எதுவும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் பேசிய விஷயங்களால் நிலா சிரித்து விட்டார். அதற்குப்பின் நிலா, துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பழையபடி வீட்டிற்கு வந்து விட்டார். இதை பார்த்து சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அப்போது நிலா, சோழனை பார்த்து எப்போ வீட்டை விட்டு போவீர்கள் என்று கேட்டார். சோழனும் சமத்தித்தார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சோழன், நீங்கள் வீட்டிற்கு வருவீர்கள் என்று எனக்கு தெரியும். உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி தான் என்றார். இதைக்கேட்ட நிலா, எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி சோழனிடம் கொடுத்து விட்டார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள். ஆனால், நிலா அது பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு நிலா, இந்த தாலியே போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு டிசைனாக இருக்கிறது என்று தான் போட்டேன் என்றார்.
நேற்று எபிசோட்:
நிலா தாலியை கழட்டித் தந்ததால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த வானதி சோழனிடம் வம்பு இழுத்து இருவருமே சண்டை போட்டுக் கொண்டார்கள். பின் வானதியை அங்கிருந்து பாண்டியன் அழைத்து சென்று விட்டார். அதற்குப்பின் சோழன் தன்னுடைய ஓனரிடம் நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் நிலா, விவாகரத்து கேட்க, சோழன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, வேலை முடித்து வீட்டிற்கு வந்த நிலா, என்னுடைய ஆபீஸில் பழைய கட்டிடங்களை பற்றி பேசியிருந்தார்கள். அதனால் நான் நம்முடைய வீட்டைப் பற்றி சொன்னேன். அவர்கள் வீட்டை பார்க்க வருகிறார்கள் என்றார். இதைக் கேட்டவுடன் சேரன் சரி என்கிறார். ஆனால், சோழன் மட்டும் சோகத்தில் இருக்கிறார். இதை பார்த்த அவருடைய அண்ணன், என்ன நடந்தது? என்று கேட்கிறார். அப்போது சோழன், நிலா விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி சொல்கிறார். பின் வீட்டிற்கு நிலாவின் பாஸ் வருகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே நிலா அறிமுகம் செய்து வைக்கிறார். சோழனையும் அண்ணன் என்பது போல சொல்லிவிடுகிறார். அதனால் சோழனுக்கு பயங்கர கோபம்.
சீரியல் ட்ராக்:
பின் பாஸ், நிலா வீட்டை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்படுகிறார் . நிலா, வீட்டை எல்லாம் சுத்தி காண்பித்து சொல்லி கொண்டு இருக்கிறார். இது எல்லாம் பார்த்த சோழனுக்கு பயங்கர கடுப்பாகி தன் அண்ணனிடம் சென்று புலம்பி கொண்டிருக்கிறார். சோழன், காதலர் தினம் வருவதற்குள் என்னுடைய காதலை எப்படியாவது நிலாவிடம் சொல்லி புரிய வைப்பேன். அவள் வாயாலே என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வைப்பேன் என்றெல்லாம் சபதம் போடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்த வானதியின் அப்பா சண்டை போடுகிறார். ஆனால், வானதி பயப்படாமல் தன்னுடைய அப்பாவை எதிர்த்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.