தாலியை கழட்டி கொடுத்த நிலா, கோபத்தில் சோழன் எடுத்த சபதம் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, தன்னுடைய ஆபீஸில் வேலை செய்யும் தோழியிடம் ஹாஸ்டல் பத்தி கேட்டார். அவருமே தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு ஹாஸ்டல் வார்டனிடம் பேசி தங்குவதற்கு நிலா ஏற்பாடு செய்தார். முதலில் சேரன் வேண்டாம் என்று சொன்னாலும் நிலாவிற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு தயாராகி கிளம்பினார். இதை அறிந்தவுடன் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டார். கோபத்தில் நிலா, நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொன்னார்.
நடேசன், நிலா வீட்டில் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டார். நிலா, சோழன் வீட்டில் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிலாவை பார்ப்பதற்காக நடேசன் ஆஸ்டலுக்கே வந்திருந்தார். அப்போது நடேசன், சோழன் செய்ததற்கெல்லாம் காரணம் நான் தான் என்று எல்லாம் உண்மையை சொன்னார். இதனால் கோபப்பட்டு நிலா, நடேசன் திட்டி அனுப்பி விட்டார்.
அதற்குப்பின் வீட்டில் சோழனிடம் யாருமே முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். நிலாவிடம் சோழன் மன்னிப்பு கேட்டார்.
அய்யனார் துணை:
சோழன் பலூன் அனுப்பி நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அங்கிருந்து அனுப்பினார். இருந்தாலுமே விடாமல் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் இல்லாததால் சோழன் குடும்பத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மோசமாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னிடம் நன்றாக பேசாமல் கடைக்கு வருபவர்களிடம் நன்றாக சிரித்து பேசுவதால் கோபப்பட்டு வானதி சண்டை போட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன் வானதியைத் திட்டி அனுப்பி விட்டார். நிலா வீட்டில் இல்லாததால் வருத்தத்தில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் நிலா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சேரன் போன் செய்து நிலாவிடம் விசாரித்தார். நிலாவுமே எதுவும் பிரச்சனை என்று சொன்னார். உடனே சேரன், உனக்கு எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்துவிடுமா என்று சொன்னார். அதற்குப்பின் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதி ஹாஸ்டலில் கொடுத்துவிட்டு சோழன் சொன்னார். இதை நிலாவின் தோழிகள் அவரிடம் கொடுத்து சோழனை மன்னிக்க சொல்லி கேட்டார்கள். நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் பல்லவனுக்கு அதிகமாக உடம்பு சரியில்லாமல் போனது.
சீரியல் ட்ராக்:
சோழன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்று விட்டார். இதனால் கோபப்பட்டு சேரன், பாண்டியன் இருவருமே பல்லவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார்கள். அப்போது வீட்டிற்கு வந்த சோழன், என்னானது என்று கேட்டார். கோபப்பட்டு பாண்டியன், சோழனிடம் சண்டை போனார். அதற்குப் பின் நிலாவிற்கு ஃபோன் செய்த பல்லவன், எனக்கு உடம்பு சரியில்லை. தயவு செய்து வீட்டிற்கு வந்து விடுங்கள் அண்ணி என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிலா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.
https://www.youtube.com/watch?v=rk_QVBFJFpQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் நிலாவை பல்லவன் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். அப்போது சோழன், நீங்கள் வீட்டிற்கு வருவீர்கள் என்று எனக்கு தெரியும். உங்கள் கழுத்தில் இருக்கும் தாலியை நீங்கள் கழட்டவில்லை. அதனால் தானே வீட்டிற்கு வந்தீர்கள் என்று பேசுகிறார். உடனே நிலா, தன்னுடைய கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி சோழனிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். அப்போது சோழன், தாலி கழட்டி கொடுத்ததை நினைத்து நான் எவ்வளவு கஷ்டப்படுவேன் என்று யாராவது நினைத்து பார்த்தீர்களா? இதே தாலியை எனக்கு கட்டுங்கள் என்று அவளே கேட்பார், கேட்க வைப்பேன் என்று சபதம் போடுகிறார்.