நிலாவை அசிங்கப்படுத்திய வானதி அண்ணன், கொந்தளித்த சோழன் பிரதர்ஸ் - அய்யனார் துணை

By subhashini · 23/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, உங்கள மாதிரி ஒரு ஏமாற்றுக்காரனை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று திட்டி விட்டு கிளம்பினார். பின் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். சோழன் சோகத்தில் இருப்பதை வீட்டில் உள்ள எல்லாருமே புரிந்து கொண்டார்கள். பின் நிலா, என்னால் வீட்டில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்று சோழனிடம் பேசி இருந்தார். அதற்குப்பின் நிலாவிற்கு லைசன்ஸ் எடுத்து தருவதை பற்றி பல்லவன், சேரன் இருவருமே சோழனிடம் சொன்னார்கள். சோழன், நிலா தன்னை விட்டு பிரியக்கூடாது என்பதற்காக ஆதார் கார்டில் நிலாவின் கணவர் சோழன் என்று மாற்றி கொடுத்து விட்டார்.

அதற்கு பின் ஆதார் கார்டு கிடைத்ததை நினைத்து நிலா சந்தோஷப்பட்டார் ஆனால், நிலா சோழன் என்பதை பார்த்து கோபப்பட்டார். உடனே சோழன், ப்ரூப்காக தான் கொடுத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாளித்தார். நிலா, முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பல்லவனிடம் சோழன், நிலா ஆதார் கார்டில் என்னுடைய பெயரை தூக்க ரொம்ப கஷ்டப்படணும். அதற்கு பதில் என்னுடன் வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். அதற்கு பல்லவன், சோழன் செய்த பிராடு வேலையை சொல்லி திட்டினார். அதன் பின் சோழன்-நிலா இருவரும் லைசன்ஸ் அப்பிளை செய்தார்கள்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் நிலா ஆஃபீஸ்க்கு போகிறார். அங்கு நிலாவின் பிறந்தநாளுக்காக ராகவ், கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதோடு எல்லோருக்குமே பிரியாணி வாங்கி தருவதாக சொல்கிறார். நிலா வேண்டாம் என்று தடுத்துமே ராகவ் கேட்கவில்லை. இதை பார்த்து அங்கு வேலை செய்பவர், இதுவரை யாருக்குமே ராகவ் இப்படி செய்யவில்லை. நிலா ஸ்பெஷல் என்று சொல்கிறார். ஆனால், நிலா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை மறக்க சொல்லி அவருடைய பெற்றோர்கள் திட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்கு வானதி, என்னால் முடியாது என்று சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம் சோழன், லைசன்ஸ் வாங்குவதற்காக நிலாவை rto ஆபிஸ் போகிறார்கள். அங்கு நிலாவை வண்டி ஓட்ட சொல்லிகிறார்கள். ஆனால், நிலா பயத்தில் தடுமாறி ஓட்டுகிறார். இதனால் நிலா லைசன்ஸை ரிஜெக்ட் செய்கிறார்கள். இருந்தாலுமே விடாமல் சோழன் கெஞ்சி கேட்டு இன்னொரு வாய்ப்பு வாங்கி தருகிறார். இருந்தாலும் நிலா பயத்தில் இருக்கிறார். உடனே சோழன், நிலாவிற்கு வேகம் வரணும் என்று திட்டுகிறார்.

https://www.youtube.com/watch?v=asuxOg7GVuM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பஸ்டாண்டில் நிலாவை பார்த்த
வானதியின் அண்ணன், இங்க பாரு ஐந்து எலி, நீ பாஞ்சாலி தானே அதனால்தான் உன்னை ஐந்து எலி என்று கூப்பிட்டேன் என கிண்டல் செய்கிறார். பின் வீட்டில் இதைப் பற்றி நிலா சொன்னவுடன் சோழன் கோபப்படுகிறார். உடனே பல்லவன், இதற்கு முன்பே இப்படித்தான் கிண்டல் செய்தார்கள். ஆனால், அன்னி தான் தடுத்துவிட்டார் என்று சொல்கிறார். இதனால் கோபத்தில் சேரன், சோழன், பல்லவன் மூவருமே வானதியின் அண்ணனை அடி வெளுத்து வாங்குகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full