தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் சோழன், ஏற்றுக்கொள்வாரா காயத்ரி? அய்யனார் துணை

By subhashini · 6/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நடேசன் இடம் பாண்டியன் கடைக்கு பூஜை போட அழைத்தார். வழக்கம் போல நடேசன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீங்களே பண்ணுங்கள் என்றார். நிலா, நீங்கள் கண்டிப்பாக வரணும் என்றார். அதற்குப்பின் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போனார். அங்கு நிலா, உன்னை விட்டு போனவர்களை நினைத்து கவலைப்படாதே. உனக்காக இருக்கும் அண்ணன்களை நினைத்து பார் என்றெல்லாம் பேசி இருந்தார். பல்லவன் அமைதியாகவே இருந்தார்.

பல்லவன், நிலா சொன்ன அறிவுரையை கேட்டு மனம் மாறி கல்லூரிக்கு சென்றார். அப்போது அங்கு வந்து சோழனிடம் பல்லவன், நிலா சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன் கடைக்கு டெகரேஷன் செய்யும் விஷயத்தைப் பற்றி வானதியிடம் சொல்லி பேசினார். வானதி, நிலா பணம் கொடுத்தார். நிலா சொல்லித்தான் இதெல்லாம் செய்கிறாயா? என்றெல்லாம் கோபத்திலும் வன்மத்திலும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், பாண்டியன் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் தன்னுடைய அண்ணியை பெருமையாக பேசினார்.

அய்யனார் துணை:

தன்னை பற்றி ஒரு கவலையும் படாமல் தன் குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பாண்டியனை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் வானதி. இன்னொரு பக்கம் சோழன், சவாரிக்கு அழைத்து வரும் நபரிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர் பயங்கர கடுப்பாகி சோழனை திட்டி விட்டு வண்டியை ஓட்ட சொன்னார். இதையெல்லாம் போனில் நிலா கேட்டுவிட்டு சோழன் மீது கோபப்பட்டார். அதற்குப்பின் சோழனை ஆபீஸ்க்கு சோழன் வர சொன்னார். சோழனும் நிலாவை பார்க்க போனார். அப்போது நிலா, வெட்கப்பட்டு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, சோழனை பார்த்து காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். ஆனால், உண்மையில் அதெல்லாம் சோழனின் கனவு. நிலா தன்னிடம் காதல் சொல்ல தான் வர வைத்தார் என்றெல்லாம் நினைத்து கனவு கண்டு கொண்டிருக்கிறார். சோழன் ஆபிசுக்கு வெளியே இருப்பதை பார்த்து ராகவிற்க்கு பயங்கர கடுப்பாகிறது. இன்னொரு பக்கம் பல்லவன், சேரனை சந்தித்து நிலா பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் அங்கு வந்த சந்தாவிடம், பல்லவன் தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்று தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார். இதனால் சந்தா கோபப்பட்டு பல்லவனை அடிக்க போகிறார். இன்னொரு பக்கம் நிலா, சோழன் இருவருமே காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலா, காயத்ரி வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறார். சோழன் முடியாது என்று மறுக்கிறார். பின் நிலா கட்டாயப்படுத்தி தான் சோழனை காயத்திரி வீட்டிற்கு அழைத்து வருகிறார். அங்கு சோழன், தான் செய்த தவறை உணர்ந்து காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கிறார். காயத்ரி, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full