நிலாவை கடுப்பேற்ற சோழன் செய்த அட்ராசிட்டி, வேதனையில் பல்லவன் - அய்யனார் துணை

By subhashini · 2/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா தான் தன்னுடைய மனைவி என்று ராகவிடம் சொல்லப் போனார். அதற்குள் நிலா- சேரன் எல்லோருமே வந்ததால் சோழனால் உண்மையை சொல்ல முடியவில்லை. அதற்கு பின் வானதி, சேரன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி, எங்கள் வீட்டில் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் பாண்டியன் என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னார். தயவுசெய்து நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு சேரன், நான் பாண்டியனிடம் பேசுகிறேன் என்றார்.

வானதி, நீங்கள் எவ்வளவு சொன்னாலும் பாண்டியன் கேட்க மாட்டான். இதற்கு ஒரே வழி நீங்கள் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார். இதையெல்லாம் கேட்டு சேரனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இன்னொரு பக்கம் நிலா, பல்லவன், சோழன் மூவருமே பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனை ஒரு பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி நிலா, சோழனிடம் சொன்னார். அதை கவனித்த சோழன், பல்லவனை பயங்கரமாக ஓட்டினார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் சேரன், தனக்கு தெரிந்த தரகரிடம் பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நிலா தன்னுடைய அம்மா வீட்டில் தீபாவளி பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாடுவார் என்று சொல் ர். அதை கேட்ட சோழன், சேரனை சந்தித்து இந்த வருட தீபாவளியை நிலா தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடியதை போல் சிறப்பாக கொண்டாட வேண்டும். நிறைய பலகாரங்கள் எல்லாம் செய்யலாம் என்று சொன்னார். அதற்கு சேரணுமே ஒத்துக்கொள்கிறார். பின் வீட்டில் பலகாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேரன் செய்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் பட்டாசு, மத்தாப்பு என்று தீபாவளியை அமர்க்களமாக சோழன் வீட்டில் கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு, தன் அம்மா வீட்டில் இருக்கும் நினைவுகள் வந்தது. சோழன் தனக்காக செய்ததை நினைத்து நிலா சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வானதிக்கு கிப்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு போய் பாண்டியன் கொடுத்தார். அதை பார்த்த வானதி ரொம்பவே சந்தோசப்பட்டு அங்கிருந்து சென்றார்.

https://www.youtube.com/watch?v=sf9ffWAGKU0

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பல்லவன், அந்த பெண்ணுக்கு என்னை பிடிக்கவில்லை. சோழன் அண்ணனை தான் பிடித்து இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டு நிலாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அடுத்த நாள் அந்த பெண்ணை பார்ப்பதற்காக பயங்கரமாக கெட்டப் போட்டு சோழன் சென்றிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து நிலா கோபப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full