கல்யாணத்தில் நடந்த கலாட்டா, போலீசிடம் வசமாக சிக்கி கொண்ட சோழன் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரனுக்கு போன் செய்த அனிஷ், நாங்கள் பத்திரமாக இருக்கோம். எங்க சொந்த ஊருக்கு போகிறோம். ஆனால், இப்போதைக்கு சந்தாவிற்கு கல்யாணம் செய்ய மாட்டார்கள். கொஞ்சம் பிரச்சனையாக இருக்கும். நாங்கள் பார்த்து கொள்கிறோம். அந்த ஊருக்கு போன உடன் சந்தாவிடம் போனை கொடுக்கிறேன் என்றார். சேரனுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. வீட்டில் எல்லோருமே சந்தாவின் சொந்த ஊருக்கு போகலாமா? என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.
சேரன், நான் வேலைக்கு கிளம்புகிறேன் என்றார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனின் மனநிலை மாறும் என்பதற்காக ஒத்துக் கொண்டார்கள். பின் சேரனுக்கு துணையாக பாண்டியன் கிளம்பி போனார். செல்லும் வழியில் எல்லோருமே சேரனின் திருமணம் நின்று போனதை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் சேரனுக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சோழன், காதல் ஜோடிகளுக்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்.
அய்யனார் துணை
அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்ய போகும் விஷயம் தெரிந்து கொண்டார். பின் சோழன், அவர்களுக்கு உதவி செய்வதாக சொன்னார். அதனால் அந்த காதல் ஜோடிகளுமே சந்தோஷப்பட்டார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவின் தோழி புது ப்ராஜெக்ட் பற்றி கேட்டார். நிலாவுமே அந்த ப்ராஜெக்ட்டை எப்படி எல்லாம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வேலை செய்யும் இடத்தில் சேரனால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. சந்தாவை நினைத்துக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், அந்த காதல் ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொள்கிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடக்கிறது. அந்த சமயம் பார்த்து அந்த கோயிலுக்கு பெண்ணுடைய சித்தப்பா வந்து விடுகிறார். அவர் போலீஸ் அதிகாரி. அவரை பார்த்தவுடன் மாப்பிள்ளையும் அவருடைய நண்பர்களும் தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள். சோழனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சோழனுமே அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். அவருடன் அந்த பெண்ணும்
வந்துவிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின்சோழன் காரை விடாமல் போலீஸ் துரத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சோழனையும் அந்த பெண்ணையும் போலீஸ் பிடித்து விடுகிறார்கள். பெண் வீட்டார், போலீசும் சோழனை அடிக்கிறார்கள். ஆனால், அந்த பெண் வாய் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். சோழன் எவ்வளவு சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், சோழன் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொல்கிறார்.