சேரன் ஜாதகத்தில் சோழன் செய்த பித்தலாட்ட வேலை, ஜோசியர் சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 6/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, எப்படி இந்த விவாகரத்து விஷயம் இவர்களுக்கு தெரியும் என்று புலம்பினார். அப்போது சோழன், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்தார். அதில் சோழன் தான் தன்னுடைய அப்பாவின் மொபைலில் இருந்து நிலாவின் அம்மாவிற்கு போன் செய்து விவாகரத்து பற்றி சொல்லி இருந்தார். ஆனால், அந்த உண்மை நிலாவின் அம்மாவிற்கு தெரியவில்லை. ஒரு வழியாக சோழன் செய்த வேலை யாருக்குமே தெரியவில்லை. அதற்கு பின் பாண்டியனிடம், வானதியின் அண்ணன் வசந்த் வம்பிழுத்தார். பாண்டியன், வானதி தான் என் பொண்டாட்டி என்றார்.

வானதி, பாண்டியனிடம் பேசுவதை பிடிக்காமல் வசந்த் வீட்டில் சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே வழக்கம் போல வானதியை திட்டினார்கள். அதற்கு வானதி, நீங்கள் என்ன சொன்னாலும் நான் பாண்டியனுடன் தான் பேசுவேன். அவனை தான் கல்யாணம் செய்வேன் என்றார். இன்னொரு பக்கம் சேரனின் திருமணத்தை பற்றி நிலா பேசி இருந்தார். அப்போது தரகர், ஜாதகம் கேட்கிறார் என்று சோழன் சொன்னார். சேரனுக்கு ஜாதகம் இல்லாததால் என்ன செய்வது என்று புரியாமல் எல்லோருமே குழம்பி விட்டார்கள்.

அய்யனார் துணை:

அப்போது சேரன் பிறந்த தேதி ஜாதகத்தை பற்றி கேட்டார்கள். அதற்குப்பின் பிறந்த நேரம் தெரிந்தால் ஜாதகம் எழுதிவிடலாம் என்று எல்லோரும் பேசி இருந்தார்கள். அதற்கு நடேசனிடம் சேரன் பிறந்த நேரத்தை கேட்டார்கள். நடேசன், அதெல்லாம் எனக்கு தெரியாது. அவன் நைட்டில் தான் பிறந்தான். அதை வைத்து ஜாதகம் எழுதிக் கொள் என்று நக்கலாக சொல்லிவிட்டு சென்றார். உடனே சோழன், சேரன் அண்ணனுக்கு ஒரு நல்ல ஜாதகத்தை எழுதி பெண் வீட்டில் கொடுத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாண்டியன்- சோழன் இருவருமே ஜாதகம் எழுதும் இடத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஜோசியரிடம் சோழன், எங்க அண்ணனுக்கு நல்ல யோகம் இருக்குமாறு நீங்களே ஒரு நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுங்கள் என்று சொல்கிறார். ஜோசியர் முடியாது என்று சொல்லியுமே சோழன் மிரட்டி எழுத வைக்கிறார். அதனால் அவர் கோபத்தில் ஏதோ ஒரே ஒரு ஜாதகத்தை எழுதி கொடுத்து விடுகிறார். பின் வீட்டிற்கு வந்த சோழன், ஜாதகம் ரெடி பண்ண விஷயத்தை நிலாவிடம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப் பின் சேரனிடம் பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி நிலா சொல்கிறார். சேரன், முதலில் தயங்கினாலும் பின் வீட்டில் எல்லோரும் சொன்னதால் ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் பெண் வீட்டில் எல்லோருமே சேரன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அவர்கள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை, ஜாதகம், நேரத்தை நம்புகிறார்கள். அப்போது அவர்கள் அழைத்து வந்த ஜோதிடர், சேரனின் ஜாதகத்தை பார்க்கிறார். அப்போது அவர், இது இப்ப எழுதிய புது ஜாதகமா? என்று கேட்டவுடன் சோழன் பதறிப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full