நிலாவின் கையில் அடிபட்டு இருப்பதை பார்த்து பதறும் சோழன், சேரன் எடுத்த முடிவு - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சோழன், நிலாவின் மனதை மாற்றத்தான் இப்படியெல்லாம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனிடம் சேரன் கோர்ட்டில் நடந்ததை விசாரித்தார். அதற்கு சோழன், விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லை என்று மீண்டும் டிராமா போட்டார்.
இது எல்லாம் கவனித்த நடேசன், சோழனிடம் தனியாக சந்தித்து விசாரித்தார். சோழன் மீண்டும் டிராமா போட்டார். உடனே நடேசன், உன்னை பற்றி எனக்கு தெரியும். ஆனால், நீ செய்வது ரொம்ப தவறு. நிலா மனம் மாற வாய்ப்பில்லை என்று திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் சேரன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன், சோழனுடன் சேர்ந்து வாழ சொல்லி எடுத்து சொல்லி புரிய வைத்தார். கடைசியில் நிலா, இருவருக்கும் பிடிக்காமல் நடந்த திருமணம் தான். விவாகரத்து வாங்குவது தான் சரியான முடிவு என்றார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் நிலா, சோழன் கோர்ட்டில் பேசியதையும், சேரன் சொன்னதையும் நினைத்து பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டி வருகிறார். அப்போது நிலை தடுமாறி நிலா கீழே விழுகிறார். இதனால் அவர் கையில் அடிபட்டு வருகிறது. அருகில் இருந்தவர்கள் நிலாவிற்கு உதவி செய்தார்கள்.
பின் ஆபீஸில் நிலா, தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று ராகவ், நிலாவிடம் காபி குடிக்க வெளியே அழைக்கிறார். நிலா, இங்கேயே ப்ராஜெக்ட் விசயமாக பேசலாம். எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராகவ் முகம் மாறுகிறது.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சோழனுக்கு போன் செய்த சேரன், எதற்காக விவாகரத்தை கேட்கிறாய்? நிலாவின் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கடைக்கு ஆட்கள் யாரும் வராததால் வானதி, நிலாவின் ராசியால் தான் இப்படி நடக்கிறது என்று ஏளனமாக பேசுகிறார். உடனே அந்த சமயம் பார்த்து வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வானதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் வெளியே செல்வதற்கு வீட்டிற்கு வந்து தயாராகிறார்.
https://www.youtube.com/watch?v=EHeSgNJlPYE
சீரியல் ப்ரோமோ :
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலா, விவாகரத்து விஷயமாக சோழன், சேரன் சொன்னதையே நினைத்துக் கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக
நிலா கீழே விழுகிறார். இதனால் நிலாவின் கையில் அடிபடுகிறது. பின் இதைப்பற்றி நிலா வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே பதறுகிறார்கள். சோழன் ரொம்பவே பயந்து போய் நிலாவின் கையை பார்த்து வருத்தப்படுகிறார். உடனே சேரன், இனிமேல் நிலாவை நீயே பத்திரமாக அழைத்துக் கொண்டு போ என்று சோழனிடம் சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து நிலாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது.