மனோகர் சொன்ன வார்த்தையால் கவலையில் இருக்கும் நிலா, சோழன் எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை

மனோகர் சொன்ன வார்த்தையால் கவலையில் இருக்கும் நிலா

By subhashini · 14/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோவிலில் நிலா-சோழன் இருவரும் சாமி கும்பிட்டு சந்தோஷமாக வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்கள். நிலா, என்னிடம் இனிமேல் பொய் சொல்லக்கூடாது என்றெல்லாம் கேட்டார். சோழனுமே நிலாவிற்கு சத்தியம் செய்து கொடுத்தார். அதற்குப்பின் தன்னுடைய அப்பாவிடம் வானதி மெடிக்கல் ஷாப் வைத்து தர சொல்லி கேட்டார். வானதியின் அம்மா, அண்ணன் இருவருமே திட்டினார்கள். வானதி, என்னால் யாரிடமும் வேலை செய்ய முடியாது. எனக்கு மெடிக்கல் ஷாப் வைத்துக் கொடுத்தால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சண்டை போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விட்டார்.

அய்யனார் வீட்டில் எல்லோருமே முதல் இரவு காண ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார்கள். வீட்டிற்கு வந்த நிலா- சோழனை ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் பாண்டியன், பல்லவன் மட்டும் சோழன் வெளியே வந்து விடுவான் என்று கிண்டல் செய்தார்கள். ரூமுக்குள் சோழன் ஏசி எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அதை பார்த்து நிலாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டார்கள். சோழன், நிலாவின் தோள் மீது பயந்து கொண்டே கை போட்டார். ஆனால், நிலா எந்த மறுப்பும் சொல்லாமல் சோழனின் மீது சாய்ந்து கொண்டார். பின் இருவருமே தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அய்யனார் துணை:

நிலா- சோழன் இருவரும் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மறுநாள் காலையில் சோழன் வெளியே வந்து தன்னுடைய சகோதரர்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வாழ்வதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். நிலாவும் வெட்கத்தில் வெளியே வர தயங்கிக் கொண்டிருந்தார். பின் சோழன் தான் நிலாவை வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.

சீரியல் ட்ராக்:

வீட்டில் எல்லோருமே வழக்கமாக அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நிலா, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இப்படித்தான் இருக்கணும் என்று நிறைய கண்டிஷன் எல்லாம் போட்டார். அது மட்டும் இல்லாமல் நடேசன் குடித்து வந்து ஆட்டம் போட்டிருந்தார். நிலா, இனிமேல் நீங்க குடிக்க கூடாது. உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு மருமகள் போலவே நடந்து கொண்டார். இதை பார்த்து சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் எல்லோருக்கும் நிலா பிரித்துக் கொடுத்தார். எல்லோரும் பரபரப்பாக தங்களுடைய வேலைகள் எல்லாம் செய்தார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மனோகர், உங்கள் இருவருக்கும் ரிசப்ஷன் ஏற்பாடு செய்திருக்கிறேன். கிளம்பி வாருங்கள் என்று சொல்கிறார். நிலா, அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறார். பின் சோழன், எதற்காக வேண்டாம் என்று சொன்னாய் என்கிறார். நிலா, நான் என் வீட்டை விட்டு ரொம்பவே விலகி விட்டேன் கஷ்டமாக இருக்கிறது என்று பேசுகிறார். சோழன், நிலாவிற்கு ஆறுதல் சொல்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full