வீட்டை விட்டு வெளியேறும் நிலாவை தடுக்க முடியாமல் தவிக்கும் சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 22/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, எதற்காக அவசரமாக செய்கிரீர்கள். பொறுமையாக இருங்கள். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றார். இதனால் வானதின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழிகளிடம் சோழன் செய்த வேலை எல்லாம் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். அதோடு சோழனை பிடிக்கும் பிடிக்காது என்பது போல இரண்டு மனநிலையிலேயே நிலா பேசிக் கொண்டிருந்தார்.
அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, எதற்காக இப்படி செய்கிறாய்? என்னை விட்டுட்டு போயிடுவியா என்றார்.

பாண்டியன், நீ தானே என்னை வேண்டாம் என்று சொல்லிப் போனாய். கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொன்னாய்? என்னை என்ன பண்ண சொல்கிறாய் என்று கேட்டார். பின் பாண்டியனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற வானதி, இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நான் பாண்டியனை தான் கல்யாணம் செய்வேன் என்றார். இதைக் கேட்டு வானதி பெற்றோர்கள் கோபப்பட்டார்கள்.

அய்யனார் துணை:

நிலாவின் அப்பா, அம்மா அய்யனார் வீட்டிற்கு வருவதால் வீட்டை சேரனும் அவருடைய சகோதரர்களும் சுத்தம் செய்தார்கள். அதற்கு பின் நிலாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தன்னுடைய அப்பா, அம்மாவை பார்த்து நிலா எமோஷனலாக அழுதார். பின் நிலாவின் அப்பா, அம்மாவை சேரனும் அவருடைய சகோதரர்களும் அன்பாக கவனித்தார்கள். அப்போது நிலாவின் அப்பா, உங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதை கேள்விப்பட்டேன். இனிமேல் நீ இங்க இருக்க தேவை இல்லை. எங்களுடன் வீட்டிற்கு வந்துவிடு என்றார். சோழன் ஷாக் ஆனார்.

சீரியல் ட்ராக்:

சேரன், பாண்டியன் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் நிலாவின் அம்மா, தனியாக உன்னிடம் பேச வேண்டும். வெளியே வா போகலாம் என்றார். நிலா தயங்கி நிற்கிறார். நிலா அப்பா, பயப்படாதே உன்னை இங்கேயே கொண்டு வந்து விடுகிறேன் என்று அழைத்து சென்றார். சோழன், நிலா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் என்று சேரனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் கோயிலுக்கு நிலாவை அழைத்து சென்றார்கள். அங்கு நிலாவின் அப்பா ரொம்ப அக்கறையாக பேசி இருந்தார். தங்களுடைய வீட்டிற்க்கே வந்து விட சொல்லி கேட்டார். நிலா, நான் வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலாவின் அப்பா, உனக்கு வேலை தான் முக்கியம் என்றால் நாங்களும் சென்னையில் உன் உடன் தங்குகிறோம். அவர்கள் வீட்டில் வேணாம் என்று சொல்கிறார். இதனால் நிலா ஒத்து கொள்கிறார். பின் அய்யனார் வீட்டிற்கு வந்த நிலாவின் அப்பா, நிலாவுடன் சென்னையிலேயே தங்கும் விசயத்தை சொல்கிறார்கள். சோழன், அதெல்லாம் நிலாவை இங்கிருந்து அனுப்ப முடியாது என்று சொல்கிறார். நிலா எதுவும் பேசாமல் தன்னுடைய துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வருகிறார். சோழன் எமோஷனலாக அழுகிறார். நிலாவின் அப்பா தாங்கள் தங்கி இருக்கும் வீட்டு அட்ரஸை சிலரிடம் கொடுத்து விட்டு செல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full