திருமணத்தில் மனோகரால் ப்ரச்சனை வருமோ என்று பதறும் சோழன், சந்தோஷத்தில் நிலா -அய்யனார் துணை

நிலா-சோழன் திருமணம்

By subhashini · 6/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் மனோகர்,எப்படியாவது நிலாவை இங்கிருந்து அழைத்து சென்றுவிடனும். வலுக்கட்டாயப்படுத்தியது நிலாவை நம்முடன் சென்றுவிடலாம் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட நிலா பயந்து போய் சோழனுக்கு தகவலை சொல்லி விட்டார். பின் சோழன், தன்னுடைய சகோதரர்களை அழைத்துக் கொண்டு நிலாவின் வீட்டிற்கு வெளியே வந்திருந்தார். மனோகர், சோழன் ஏதாவது திட்டம் போடுவாரா? என்று பயத்தில் வீடு முழுக்க செக் பண்ணுகிறார். அதோடு வீட்டையும் பூட்டி சாவியை வைத்துக் கொண்டார். பின் தன் தந்தை தூங்கிய பிறகு நிலா யாருக்கும் தெரியாமல் சோழனுடன் அய்யனார் வீட்டிற்கு வந்து விட்டார்.

மனோகர், நிலாவை காணவில்லை என்று வீடு முழக்க தேடினார். பின் சோழன் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று கிளம்பி வந்தார். அங்கு நிலா இருப்பதை கவனித்த மனோகர் பயங்கரமாக கோபப்பட்டார். நிலா, நான் இங்கு தான் இருப்பேன். திருவண்ணாமலை நான் உங்களுடன் வரவில்லை என்றார். மனோகர், உனக்கும் சோழனுக்கும் என்ன உறவு? விவாகரத்து ஆன பிறகு இங்கு இருக்க முடியாது? என்று சண்டை போட்டார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் நிலா, நான் சோழனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். மனோகரால் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனார்.

அய்யனார் துணை:

நிலா, சோழனை திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டதால் அய்யனார் வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், மனோகர் அவருடைய மனைவி இருவரும் கோபப்பட்டார்கள். நிலாவின் பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். ஆனால் நிலா கேட்கவே இல்லை. சோழனை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். நிலா சொன்னதை கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார். பின் நிலா விடமும் எமோஷனலாக சோழன் பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் நிலா-சோழன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்தார்கள். அப்போது நிலாவிற்கு போன் செய்த மனோகர், திருமணத்திற்கு புடவை நகையெல்லாம் வாங்க வேண்டும் என்று கிளம்பி வர சொன்னார். நிலாவும் சேரனிடம் இதைப் பற்றி சொன்னார். சேரன், மனோகர் வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது நிலாவின் அம்மா திருமணத்தில் விருப்பம் இல்லாதது போல பேசி இருந்தார். மனோகர், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது போலவே பேசி இருந்தார். சேரன், அவர்கள் இருவரையும் தயவு செய்து சேர்த்து வையுங்கள். நிலாவை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன்- நிலா திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் தடபுடலாக செய்து கொண்டிருக்கிறார்கள். நிலாவின் அப்பா, அம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாகி விடுகிறார்கள். பின் கோயிலுக்கு எல்லோருமே கிளம்பி வந்து விடுகிறார்கள். நிலா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே திருமணத்தை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், சோழன் மட்டும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? நிலாவின் அப்பா கல்யாணத்தை தடுத்து நிறுத்தி விடுவாரோ? என்ற பயத்திலேயே இருக்கிறார். சேரன், சோழனை சமாதானம் செய்கிறார். இருந்தாலும் சோழனால் அந்த பதட்டத்தில் இருந்து வர முடியவில்லை. சீக்கிரம் நிலாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் புலம்பி கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full