சோழனுக்கு பீதியை கிளப்பிய குடும்பம், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்துங்கள். இதெல்லாம் நாடகம் தானே என்றெல்லாம் கேட்டார். பின் பலவனுக்கு போன் செய்து சோழன் விசாரித்தார். நிலா, காயத்ரி வீட்டில் இருப்பது தெரிந்தவுடன் இன்னும் சோழனுக்கு கதி கலங்குகிறது. பின் கதவை திறந்த காயத்ரி எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். நிலா அவருக்கு ஆறுதல் சொன்னார்.
நிலா, காயத்ரிக்கு ஆறுதல் சொன்னார். காயத்ரி, நான் அவரை உண்மையாக காதலித்தேன். என்னை கல்யாணம் செய்து கொள்வார் என்று நினைத்தேன். என்னிடம் அப்படித்தான் அவர் பழகினார் என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு நிலா, சோழன் எல்லோரிடமும் நன்றாக பேசுவார். அவர் நீ காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நீ நிலைமையை புரிந்து கொள். அவர் உன்னை ஏமாற்றவில்லை என்றெல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். இருந்தாலும் காயத்ரி அழுது கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் எல்லோருமே வீட்டை சுத்தம் செய்து தயாராகிறார்கள். சேரன், நிலாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. ரூமுக்குள் சென்று தான் செய்த தவறை நினைத்து சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சோழன் கெஞ்சி கதறினார். ஆனால் யாருமே கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்று எபிசோட்டில் நிலா எடுத்து சொல்லி புரிய வைத்ததால் காயத்ரியும் மனம் மாறி விடுகிறார். பின் நிலா, இனிமேல் காதலிப்பதற்கு முன்பு அந்த நபரை பற்றி தெளிவாக தெரிந்து கொள். அதற்கு பிறகு காதலிக்க ஆரம்பி என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். காயத்ரி நண்பர்களுடன் பேசிவிட்டு நிலா, பல்லவன் இருவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று தப்பிக்க பார்க்கிறார். வாசலிலேயே கொடுவா வைத்துக்கொண்டு அய்யனார் போல நடேசன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பாண்டியன், சேரன் இருவருமே சோழனை வெளியே விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பின் நிலா வந்தது அறிந்து சோழன் பதறி அடித்துக் கொண்டு காய்த்ரி வந்து இருக்கிறாளா? என்று பார்க்கிறார். ஆனால், காயத்ரி வரவில்லை. இருந்தாலுமே பயத்தில் சோழன் உள்ளே ரூமிற்குள் சென்று விடுகிறார். பின் சோழன் புலம்பியது எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை பாண்டியன் நிலாவிடம் காண்பிக்கிறார். அதை பார்த்து நிலாவிற்கு சிரிக்கிறார். அதற்கு பின் நிலா, சோழனிடம் பேசுவதற்கு ரூமுக்குள் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.