பாண்டியன்-சேரன் செய்த காதல் லூட்டியால் உடைந்து போன சோழன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 13/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன்,சந்தா இருவரும் நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேரன், சந்தாவை பத்திரமாக வீட்டில் விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.இனி அடிக்கடி வெளியில் போகலாம் என்றார். இன்னொரு பக்கம் சோழனுக்கு பசிப்பதால் சமைக்க சொல்லி கேட்டார். நிலா எல்லோரும் சேர்ந்து தான் சமைக்கணும் உதவி செய்யுங்கள் என்று சொல்வதால் சோழன் வழி இல்லாமல் அமைதியாக இருந்தார்.

சமைக்கும்போது நிலா- சோழன் இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டார்கள். உடனே பாண்டியன், சாப்பாடு வாங்கி வந்து விட்டார். அதற்குப் பின் சேரன் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த சேரனிடம், சோழன் விசாரித்தார். ரவுடிகள் தகராறு செய்ததை சொல்லாமல் சந்தாவுடன் பீச்சுக்கு போயிட்டு வந்ததை மட்டும் சேரன் சொன்னார். அதற்குப்பின் அந்த ரவுடிகள் சேரனின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு வந்து விட்டார்கள். அப்போது அந்த ரவுடிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை அடிக்க போனார்கள்.

அய்யனார் துணை:

உடனே சோழன், பாண்டியன் இருவரும் தடுத்து அந்த ரவுடிகளை அடித்து அங்கிருந்து அனுப்பினார்கள். நடேசனும் செங்கல் எடுத்து அனைவரையும் அடித்து துரத்துகிறார். பின் சோழன், என்ன நடந்தது என்று கேட்டார். உடனே சேரன், இந்த ரவுடிகள் தகராறு செய்ததை எல்லாம் சொன்னார். இதையெல்லாம் பார்த்து சோழன், பாண்டியனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்கு பின் வானதி, பாண்டியன் கடைக்கு வந்தார். வழக்கம் போல வானதி பாண்டியன் மீது கோபத்தில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், நீ கொஞ்ச நாட்களாக சரியாக இல்லை. என்னுடன் பேசுவதில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப காதலாக பேசுகிறார். இதைக் கேட்டு வானதி மனமாறுகிறார். பின் பாண்டியன்-வானதி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அந்த சமயம் வந்த சோழன், அதை பார்த்து பயங்கர காண்டாகிறார். பின் சோழன், பாண்டியன்- வானதி இருவரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சேரன் வேலை செய்யும் இடத்திற்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

அங்கு சந்தா-சேரன் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சந்தா, சேரனுக்கு முத்தம் கொடுத்து விடுகிறார். இதை பார்த்து சோழன் சாக்காகிறார். இப்படி தன்னுடைய தம்பி, அண்ணன் எல்லோருமே ரொமான்டிக்காக இருப்பதை பார்த்துச் சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சோழன், நடந்ததை எல்லாம் சொல்லி புலம்புகிறார். நிலாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full