காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் சோழன், நிலா எடுத்த முடிவு - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 12/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா வழக்கம் போல தாலியை கழட்டி சோழன் கையில் கொடுத்தார். இன்னொரு பக்கம் வானதி, அவருடைய அண்ணனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த வானதியின் பெற்றோர்கள், இனி நீ பாண்டியனுடன் பேசக்கூடாது என்று திட்டினார்கள். ஆனால், வானதி கேட்கவே இல்லை. பின் வானதி, பாண்டியனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது இருவரும் சண்டை போட்டு கொண்டார்கள். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பீச்க்கு போனார்கள்.

பீச்சில் நிலா, சோழன் இருவருமே சந்தோஷமாக விளையாடினார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் பீச்சில் குடிப்பதால் போலீஸ் அவரை திட்டி வார்னிங் கொடுக்கிறார்கள். இதனால் சோழன் குடும்பத்தினர் நடேசனை திட்டினார்கள். மறுநாள் காலையில் நிலா ஸ்கூட்டி ஓட்டுவதற்கு சோழனை அழைத்துக்கொண்டு போனார். அதற்கு பின் பல்லவன், நிலா இருவரும் வேலைக்கு கிளம்பு போது வானதியின் அண்ணன் வழி மறைத்து நிலாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி விட்டார். இதனால் கோபப்பட்டு பல்லவன் அவர்களை அடிக்க போக, நிலா தடுத்து விட்டார்.

அய்யனார் துணை:

நேற்று எபிசோட்டில் வானதி அண்ணன் சொன்னதை நினைத்து பல்லவன் கோபப்பட, நிலா வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவரை சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து பிரிந்தார்கள். இன்னொரு பக்கம் சோழன் விவாகரத்து நினைத்து வேதனையில் இருந்தார். அப்போது சோழனுக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்து பற்றி சொன்னார். பின் சோழன், நிலாவிடம் தன் காதலை சொல்ல பீச்சிற்கு அழைத்து சென்றார். அப்போது சோழன், நான் உங்களை மனைவியாக தான் பார்க்கிறேன் என்று சொன்னதால் நிலா ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் தன் மனதில் இருக்கும் காதலை சொல்கிறார். அதற்கு நிலாவும் ஒத்துக்கொள்கிறார். கடைசியில் அது சோழன் கண்ட கனவு. அந்த சமயம் பார்த்து சோழனின் தோழன் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது நிலா-சோழன் இருவருமே விசாரிக்கிறார்கள். அப்போது அந்த பெண், சோழனின் நண்பனை காதலிக்கவில்லை. ஆனால், சோழன் நண்பன் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார் என்று தெரியவந்தது. உடனே நிலா, விருப்பம் இல்லாமல் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது. பெண்களுக்கு தன் வருங்கால கணவனை நினைத்து சில கனவுகள் இருக்கும்.

சீரியல் ட்ராக்:

அதற்காக நண்பராக பழகும் ஒருவரை கணவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் சொல்வதால் சோழன் தான் சொல்ல வந்த காதலை மறைத்து விடுகிறார். அதற்குப்பின் வீட்டில் சோழன் சோகமாகவே இருக்கிறார். சேரன் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே சோழனால் ஜீரணிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்ல நிலா தயாராகி வருகிறார். சோழன் சோகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full