சோழனை வெறுப்பேற்ற சேரன் சொன்ன வார்த்தை, வேதனையில் புலம்பும் காயத்ரி - அய்யனார் துணை

By subhashini · 6/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன் இருவரும் நிலா சொல்வது தான் சரி. நிலா விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்த வீட்டை விட்டு போகட்டும் என்றெல்லாம் சொன்னார்கள். இன்னொரு பக்கம் பல்லவன், உண்மையாலுமே காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்களா? என்றார். அதற்கு நிலா, நான் பைத்தியமா? அவரை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் சொன்னேன் என்றார். கடைசியில் சோழன், தயவுசெய்து நிலாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்றெல்லாம் கெஞ்சி கதறினார். இருந்தாலும் சேரன் கேட்கவில்லை.

சேரன், பாண்டியன், நடேசன் மூவருமே மும்முரமாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். சோழன் ரொம்பவே பயந்து கொண்டு புலம்பினார். தன்னுடைய அண்ணனிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், சேரன் கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் காயத்ரியின் வீட்டிற்கு பல்லவன், நிலா இருவரும் சென்று விட்டார்கள். அப்போது காயத்ரியின் நண்பர்கள், காயத்ரி கதவை சாத்திக்கொண்டு வெளிய வரவில்லை அழுது கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். நிலா கதவு தட்டியுமே காயத்ரி வரவே இல்லை.

அய்யனார் துணை:

இன்னொரு பக்கம் சோழன், நான் நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். தயவுசெய்து இதையெல்லாம் நிறுத்துங்கள். இதெல்லாம் நாடகம் தானே என்றெல்லாம் கேட்டார். பின் பலவனுக்கு போன் செய்து சோழன் விசாரித்தார். நிலா, காயத்ரி வீட்டில் இருப்பது தெரிந்தவுடன் இன்னும் சோழனுக்கு கதி கலங்குகிறது. பின் கதவை திறந்த காயத்ரி எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். நிலா அவருக்கு ஆறுதல் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, காயத்ரிக்கு ஆறுதல் சொல்கிறார். காயத்ரி, நான் அவரை உண்மையாக காதலித்தேன். என்னை கல்யாணம் செய்து கொள்வார் என்று நினைத்தேன். என்னிடம் அப்படித்தான் அவர் பழகினார் என்று எமோஷனலாக பேசுகிறார். அதற்கு நிலா, சோழன் எல்லோரிடமும் நன்றாக பேசுவார். அவர் நீ காதலிக்கும் விஷயம் தெரிந்த உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நீ நிலைமையை புரிந்து கொள். அவர் உன்னை ஏமாற்றவில்லை என்றெல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். இருந்தாலும் காயத்ரி அழுது கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் எல்லோருமே வீட்டை சுத்தம் செய்து தயாராகிறார்கள். சேரன், நிலாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. ரூமுக்குள் சென்று தான் செய்த தவறை நினைத்து சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சோழன் கெஞ்சி கதறுகிறார். ஆனால் யாருமே கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full