பாண்டியன்-சேரன் செய்த வேலையால் புலம்பும் சோழன், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொன்னார். சோழன் அந்த பெண்ணிற்கு தேங்காய் உடைக்க உதவி செய்தார். இதை சேரன், நிலா எல்லாம் பார்த்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த சேரன், சோழனை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சோழன் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், இந்த முறை சேரன் கடுமையாக சோழனை திட்டிவிட்டு சென்றார். பாண்டியன், பல்லவன் இருவருமே சேரனுடன் சேர்ந்து திட்டினார்கள்.
நிலா எதுவும் பேசாமல் சோழனை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் அவுட்டிங் செல்வதற்கு தயாராகினார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சந்தோசமாக வழி அனுப்பி வைத்தார்கள். சந்தாவும் சேரனுடன் வெளியே செல்வதால் சூப்பராக தயாராகி வந்தார். பின் இருவரும் சேர்ந்து பைக்கில் லாங் டிரைவ் சுற்றினார்கள். பின் கடைசியாக பீச்சுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
சேரன்-சந்தா இருவரும் பீச்சில் ரொம்ப சந்தோசமாக விளையாடியும் பேசியும் இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அந்த இடத்திற்கு மூன்று ரவுடிகள் வந்தார்கள். அவர்கள் சந்தாவை பார்த்து தப்பாக பேசினார்கள். கோபப்பட்ட சேரன், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்றார். உடனே அந்த ரவுடிகள் சந்தாவின் மீது கை வைக்க போனார்கள். கோபத்தில் சேரன் அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சேரன்,சந்தா இருவரும் நடந்ததை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேரன், சந்தாவை பத்திரமாக வீட்டில் விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.இனி அடிக்கடி வெளியில் போகலாம் என்றார். இன்னொரு பக்கம் சோழனுக்கு பசிப்பதால்
சமைக்க சொல்லி கேட்டார். நிலா எல்லோரும் சேர்ந்து தான் சமைக்கணும் உதவி செய்யுங்கள் என்று சொல்வதால் சோழன் வழி இல்லாமல் அமைதியாக இருந்தார்.
https://www.youtube.com/watch?v=HcqjJRgLi1A
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் சோழன் சோகமாக இருக்கிறார். நிலா, என்ன நடந்தது என்று கேட்கிறார். அப்போது சோழன், பாண்டியன் கடைக்கு போனால் பாண்டியன்-வானதி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். சேரன் அண்ணன் இருக்கும் இடத்திற்கு போனால் சந்தா, அண்ணா இருவரும் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். நமக்குள் எதுவுமே நடக்கவில்லையே என்று வருத்தப்பட்டு புலம்புகிறார். உடனே நிலா, நீங்கள் யாரையும் காதலிக்கவில்லையா? சீக்கிரம் ஒரு பெண்ணை காதலியுங்கள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்று சொல்கிறார்.