நடேசன் கொடுத்த ஐடியா, சேரனை கண்டுபிடித்தாரா சோழன்? விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 10/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள். ஆனால், சேரன் தூங்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அதற்குப்பின் சேரன், தன் தம்பிகள் தூங்கியவுடன் எமோஷனலாக ரொம்ப கதறி அழுதார். மறுநாள் காலையில் வீட்டில் சேரன் இல்லை. வீடு முழுக்க சேரனை எல்லோருமே தேடினார்கள். அப்போது பல்லவன், சேரன் எழுதி வைத்த கடிதத்தை கொடுத்தார்.

அதில் சேரன், என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட வேண்டாம். நான் வீட்டை விட்டுப் போகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். என்னை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்றார். இதைக் கேட்டு நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே எமோஷனலாக கதறி அழுதார்கள். பின் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் சென்று தேடினார்கள். ஆனால், எங்குமே சேரன் கிடைக்கவில்லை. சேரன் வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சென்று விசாரித்தார்கள். அங்கேயுமே அவர் இல்லை.

அய்யனார் துணை:

எங்கு தேடியும் சேரன் கிடைக்கவில்லை என்று அவருடைய தம்பிகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். நடேசன் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தார். ஆனால், சேரன் இல்லை. சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதற்குப்பின் சோழன்- நிலா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேரன் காணவில்லை என்று புகார் கொடுத்தார்கள். அதற்குப் பின் சோழன் தன் அண்ணனை நினைத்து ரொம்பவே எமோஷனலாக கதறி அழுதார். நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்த்தார். இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லா இடமும் தேடி அலைந்து சேரன் கிடைக்காததால் வேதனையில் வீட்டில் உள்ள எல்லோருமே அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து நடேசனின் தங்கையும் அவருடைய கணவரும் ஆறுதல் சொல்வதற்காக வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வந்த நடேசன், தன்னுடைய தங்கை, கணவர் எல்லோரையும் திட்டி விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனால், அவர்கள் கோபப்படாமல் சேரன் வீட்டில் ஆறுதல் சொல்லிவிட்டு போகிறார்கள். அதற்குப்பின் நடேசன், இந்திக்காரப் பெண் வீட்டில் சேரன் இருக்கிறாரா? தேடிப்பார் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே சேரன் சந்தேகப்பட்டு சந்தாவின் அண்ணாவை பார்க்கிறார். சந்தாவின் அண்ணாவால் எதுவும்
மறைக்க முடியவில்லை. பின் வேறு வழியில்லாமல் சேரன் தன் வீட்டில் இருக்கும் உண்மையை சொல்லிவிடுகிறார். அதற்குப்பின் சேரனை பார்க்க சோழன் சென்று விடுகிறார். அப்போது கோபத்தில் சோழன், வீட்டில் எல்லோருமே அழுது கொண்டிருப்பதை சொல்கிறார். பின் சேரன், சோழனை கட்டிப்பிடித்து அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full