பல்லவனின் அம்மாவை கண்டுபிடித்த சோழன், நிலா சொன்ன விஷயம் - அய்யனார் துணை

By subhashini · 11/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். காயத்ரியை அழைத்து கொண்டு வரவில்லை தானே என்று கேட்டார். அதற்கு நிலா, நாம் இருவரும் வெளியே போகலாம் வாருங்கள் என்று சொன்னார். பின் சேரன், நிலா சொன்னதால் தான் உன்னை அப்படி பேசினோம் என்றார். அதற்குப்பின் நிலா, சோழன் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, நான் பல்லவன் அம்மாவை பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரியுங்கள் என்றார் .

அதற்கு சோழன், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையே என்றார். நிலா, கண்டிப்பாக அவர்கள் தான். இந்த உண்மையை கண்டுபிடிக்கணும் என்றார். பின் சோழன், நான் செய்தது பெரிய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று தான் செய்த தவறுக்கு வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் போன் எடுக்கவில்லை என்று வானதி வீட்டிற்கு வந்து விட்டார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், பல்லவன் இருவரும் சொன்னார்கள். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் நிலா- சோழன் இருவருமே பல்லவனின் அம்மாவை பற்றி கேட்பதற்காக நடேசன் இடம் பேசுகிறார்கள். நடேசன், எனக்கு எதுவும் தெரியாது. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று கடுமையாக பேசுகிறார். உடனே நிலா, நான் பலவனின் அம்மாவை சென்னையில் பார்த்தேன். உங்களுக்கு இந்த உண்மை தெரியும். என்ன நடந்தது? உண்மையை சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால், நடேசன் உண்மையை சொல்லாமல் நிலாவை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் பாத்ரூமில் வலிக்கு சேரன் கீழே விழுந்ததால் அவருடைய காலில் அடிபட்டு விடுகிறது.

,சீரியல் ட்ராக்:

நடேசன் காலை நீவி விடுகிறேன் என்று இன்னும் வலியை அதிகமாக்கி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனின் காலில் அடிபட்டதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். பின் நிலா, பாண்டியன், சோழன், பல்லவன் நான்கு பேருமே சேர்ந்து சமைக்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்லவனின் அம்மாவை காட்டுகிறார்கள். ரொம்ப கஷ்டத்தில் கடன் காரர்கள் தொல்லையில் பல்லவனின் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய கணவருக்கும் பல்லவனின் அம்மாவுக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் நடந்து சண்டை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=lnC7oS_vWIg

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் சோழன் ஒரு வழியாக பல்லவன் அம்மாவின் வீட்டை கண்டுபிடித்து விடுகிறார். பின் இதை பற்றி சோழன், நிலாவிடம் சொல்கிறார். பின் சோழன்- நிலா இருவருமே சேர்ந்து பல்லவின் அம்மாவிடம் பேச வருகிறார்கள். நடேசன் உடைய போட்டோவை பார்த்து பல்லவன் அம்மா கோபப்படுகிறார். பின் நிலா, இதற்கு முன்பு என்ன பிரச்சனையோ நீங்கள் வீட்டிற்கு வரவில்லை. இப்போது நீங்கள் கண்டிப்பாக வரணும் என்று பல்லவனின் புகைப்படத்தை காட்டுகிறார். அதை பார்த்தவுடன் அவருடைய அம்மா ரொம்ப எமோஷனலாக அழுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full